பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 397

தலமுறையென்பது கோயில் திருவேட்களம் முதலா கத் திருப்பதிக் கோவையிற் குறித்த முறையை யொட்டித் தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்களே யெல்லாம் தில்லேப்பெருங்கோயில் முதலாக வரிசைப் படுத்தி அவ்வத்தலங்களுக்குரிய தேவாரப் பதிகங்களே முற்குறித்த ஏழு திருமுறைப் பாகுபாட்டிற்கு ஏற்ப முறைப்படச் சேர்த்து அமைத்த முறையாகும்.

இவ்விருவகையுள் முற்கூறிய பண் முறையமைப்பே பழைய ஏட்டுச்சுவடிகளில் இடம் பெற்றுள்ளது. மூவர் தேவாரப்பதிகங்களே ஏழு திருமுறைகளாகப் பகுத்து வழங்கும் திருமுறைப்பகுப்புக்கு அடிப்படையாயமைந் தது இப் பண்முறையமைப்பே எனக் கருதுதல் பொருந் தும். பண்முறையமைப்பாகிய இதனே ஆதாரமாகக் கொண்டு நோக்கிளுல்தான் மூவர் திருப்பதிகங்களேயும் முதல் ஏமு திருமுறைகளாகம் பகுத்து வழங்கிய நம் முன்னேரது பகுப்பு முறை இனிது விளங்கும். தேவாரத் திருப்பதிகங்களைத் தல முறையில் அமைத்துப் பயிலும் வழக்கம் பிற்காலத்தில் தோன் றியதென வே கருத வேண்டியுளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றை முறையே கண்டு வழிபடும் விருப்புடைய சிவநேசச் செல்வர்கள், தாம் வழிபட விரும்பிய ஒவ்வொரு தலத் திற்கும் அமைந்த தேவாரத் திருப்பதிகங்கள் முழு வ ைதயும் நாள்தோறும் முறையே பாராயணஞ் செய் தற்கு ஏற்ற வண்ணம் முறைப்படுத்தப்பெற்றதே இத் தலமுறைப் பகுப்பாகும். இப்பகுப்பு தில்லைப்பெருங் கோயிலே மு த ன் ைம த் திருத்தலமாகக்கொண்டு அமைந்திருப்பது தேவார ஆசிரியர் மூவர் திருவுள்ளத் திற்கும் ஏற்புடையதேயாகும். இது, சிவத்தலங் களெல்லாவற்றிற்கும் முதலில் வைத்துப் போற்றத் தகும் சிறப்புடைய திருத்தலம் என்ற நோக்கத்துடன் தில்லேப் பெருங்க்ோயிலேப்பற்றி அம் மூவரும் உளமு வந்து பாடிய திருபாடற்குறிப்புக்களால் நன்கு புலம்ை.