பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

பன்னிரு திருமுறை வரலாறு


இக்குறிப்பின விளகும் முறையில் கோயில் திருவேட் களம் நெல்வாயில் கழிப்பாலே எனத் தொடங்கும் திருப்பதிக் கோவை அமைந்திருத்தல் அறியத் தக்க தாகும். மேற் குறித்த பண்முறை, தலமுறை என்னும் இருவகை முறைகளுள் தேவார ஆசிரியர் கால ந் தொட்டு இடையீடின்றி வழங்கிவருவதும் சைவத் திரு முறைகள் பன்னிரண்டு என்ற பகுப்பிற்கு நிலேக் கள 10ாக அமைந்ததும் பண் முறையே யாதலின் அம்முறை யினேப் பின் பற்றித் தேவாரத் திருப்பதிகங்களின் அமைப்பினே நோக்குதல் ஏற்புடையதாகும்.

யாவருக்கும் தாயும் தந்தையுமாகிய அம்மை யப்பர் அளித்த ஞான வாரமுதமாகிய பாலேப் பருகிப் பேருணர் விற் பொலியும் ஆளுடைய பிள்ளையார், உள் நிறைந்து பொழிந்தெழுந்த உயர் ஞானத் திருமொழி யால் முதன்முதல் திருவாய்மலர்ந்தருளியது 'தோடு டைய செவியன்’ எனும் முதற் குறிப்புடைய பிரமபுரத் திருப்பதிகமாகும். யாரளித்த பாலடி சில் உண்டனே? எச்சில் மயங்கிட உனக்கு இதனே இட்டாரைக் காட்டுக’ என வினவிக் கையிற் சிறியதொரு கோல் கொண்டு சிவபாத விருதயராகிய தந்தையார் தம்மை அடித்தற்கு ஓங்கியபொழுது, சிவஞானம்பெற்ற பிள்ளை யார், தம் கண்ணெதிரே விசும்பில் விடையின் மேல் எழுந்தருளிய அம்மையப்பரைத் தம் தந்தையார்க்கு ஒரு திரு விரலாற் சுட்டிக்காட்டி எம்மை இது செய்த பிரான் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனே' என அடையாளங்களுடன் புலப்படுத்துவதாக அமைந்தது. தோடுடைய செவியன்’ எனும் இத்திருப்பதிக மாதலின், இதனே மெய்மை மொழித் திருப்பதிகம் எனச் சேக்கிழாரடிகள் சிறப்பித்துப் போற்றியுள்ளார். எல்லேயிலா மறைகளுக்கெல்லாம் முதலாக அமைந்தது ஒமெனும் எழுத்தாகிய பிரணவம கும். மறைமு த லெழுத்தாகிய ஓம்’ என்பதிலுள்ள ஒகாரத்தினத்