பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 399

"தமிழ்’ என்பதன் முதலெழுத்தாக அமைந்த தகர மெய்யுடன் இணைத்துத் தொடங்கிய சிறப்பு தோடு டைய செவியன்’ எனும் இத்திருப்பதிகத்துக்கு உண்மையால், ' எல்லேயில மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை, மல் லல்நெடுந் தமிழ் எனப் போற்றப்பெற்று முதற்றிருமுறையில் முதற்றிருப் பதிக மாக முறைப்படுத்தப்பெற்றது.

இத்திருப்பதிகத்திற்குரிய பண் ைநவளம் என்ப தாகும். இதனே இக்காலத்தார் நட்டபாடை என வழங்குவர். திருஞான சம்பந்தப் பிள்ளையார் முதன் முதற் பாடியருளிய இப்பதிகத்தில் அமைந்த பண் நட்டிபாடையாதலின், பிள்ளேயார் நட்டபாடைப் பண்ணிற் பாடியருளிய திருப்பதிகங்கள் யாவும் தோடுடைய செவியன்’ எனும் இத்திருப்பதிகத்தை யொட்டி முதற்றிருமுறையின் முதற்கண் வைக்கப் பெற்றன. ஆளுடைய பிள்ளையார்க்குக் காலத்தால் முற்பட்டவர் காரைக் காலம்மையார். அம்மையார் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதி கங்கள் இரண்டனுள் கொங்கை திரங்கி என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம், நட்டபாடைப் பண்ணில் அமைந்திருப்பதுபோலவே, பிள்ளேயார் அருளிய முதல் திருப்பதிகமும் ைநவளம் என்ற நட்டபாடைப் பண்ணில் அமைந்திருத்தல் இங்கு ஒப்பு நோக்கி யுன ரத்தக்கதாகும்.

மூவாண்டிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற ஆளுடைய பிள்ளையார் அம்மையப் பரை விடை மேற் கண்டு தம் தந்தையார்க்குக் காட்டும் நிலேயில் தோடுடைய செவியன்’ எனும் இத்திருப்பதி கத்தைப் பாடியபின் அடுத்து நிகழ்ந்த அற்புதச் .ெ ச ய ல், திருஞானசம்பந்தர் திருக்கோலக்காவை அடைந்து இறைவனே வணங்கிப்பாடி அப்பெரு மானுல் அளிக்கப்பட்ட பொற்ருளத்தினேப் பெற்றமை