பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

பன்னிரு திருமுறை வரலாறு


யோயாம். உலகவர் கண்டு மகிழ இவ்வியத்தகு செயல் நிகழும் நிலேயிற் பாடிய திருப்பதிகம் மடை யில் வாளே பாய என்ற முதற் குறிப்புடையதாகும். இப்பதிகம் தக்கராகம் என்ற பண்ணிற் பாடப்பெற்ற தாதலின், தக்க ராகப் பண்ணமைந்த திருப்பதிகங்கள் யாவும் இதனைச் சாரவைக்கப்பெற்றன. குறிஞ்சிப் பெரும்பண்ணுக்குரிய தைவளம் என்ற முதல் திறத் தின் அகநிலையாக அமைந்தது நட்டபாடை. அதனே யடுத்துப் பாலேப்பெரும் பண்ணுக்குரிய அராகம் என்ற முதல் திறத்தின் அகநிலையாக அமைந்த தக்க ராகப் பண் அமைந்திருத்தல் பொருத்தமுடையதேயாம். தக்கராகப் பண்ணுடன் பெயரால் ஒற்றுமையுடையது பழந்தக்கராகம் என்ற பண்ணுகும். எனவே பழந்: தக்கராகப் பண்ணமைந்த பதிகங்கள் தக்கராகப் பதிகங்களே அடுத்துவைக்கப்பட்டன. தக்க கைசிகம் என்ற பெயரே தக்கேசி எனத் திரிந்ததென்பர். இப் பெயரொற்றுமை கருதித் தக் கேசிப் பண்ண மைந்த பதிகங்கள் பழந்தக்க சாகப் பண் ணமைந்த பதிகங்களே அடுத்துவைக்கப்பட்டன. இனி, பண்டைத் தமிழ்ச் சான் ருேங்கள் நானிலத்து ஐந்தினேயொழுக்கங்களுக் குச் சிறப்புரிமையுடைய வாகப் பகுத்துரைத்த பழைய தமிழ்ப் பண்களுள் குறிஞ்சிப் பண் முதன் மையுடைய தாதலின் குறிஞ்சிப்பண்ணிலமைந்த பதிகங்கள் தக்கேசிப் பதிகங்களைச் சா வைக்கப்பட்டன. குறிஞ்சி யொடு பெயரெ பற்றுமையுடைய பண்கள் வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி என்பனவாகும். இவ்விரு பண்களிலும் அமைந்த பதிகங்கள் குறிஞ்சிப்பண்ணுக் குரிய பதிகங்களே அடுத்து முறைப்படுத்தப்பெற்றன. எடுத்த இயலும் இசையும் இடையே முரிந்து மாறுபடு மியல்புடையதாய் அமைந்த இசைப்பாடல் முரி எனப் படும். இத்தகைய முரிப்பாடல்களாக அமைந்தது.

யாழ்நூல் , பக்கம் 285. 2. "எடுத்த இயலும் இசையும் தம்மின்

முரித்துப் பாடுதல் முரியெனப் படுமே”

(சிலப். கானல்வரி அரும்பதவுரை மேற்கோள்)