பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 40;

  • மாதர் மடப்பிடி’ என்னும் முதற்குறிப்புடைய திருத் தருமபுரப்பதிகமாகும். இயலிசைத் திறத்தில் வேறு பாடுடைமையால் யாழில் இசைத்தற்கு அடங்காத நிலையில் யாழ்முரி எனப் பெயர் பெற்ற இத் திருப் பதிகம், முதற்றிரு முறையில் இறுதித் திருப்பதிகமாக வைக்கப்பெற்றது. எனவே முதற் றிருமுறையாகிய இதன் கண் நட்டபாடை, தக்கராகம், பழந்தக்கராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக்குறிஞ்சி, மேகராகக்குறிஞ்சி என்னும் ஏழு பண்களுக்குரிய நூற்றுமுப்பத்தைந்து திருப்பதிகங்களும் யாழ்முரி என்ற திருப்பதிகம் ஒன்றும் ஆக நூற்றுமுப்பத்தாறு திருப்பதிகங்கள் இடம் பெற்றிருத்தல் காணலாம்.

மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களில், இறைவனது திருவருட் பெருமையினே உலகமக்கள் உணர்ந்து போற்றும்படி வியப்புடைய அருட்செயல் கள் பல நிகழும் வண்ணம் பாடப்பெற்ற திருப்பதிகங் களே அற்புதத் திருப்பதிகங்கள் எனப் போற்றுவர் பெரியோர். மூன்ரும் வயதினராகிய கவுணியப் பிள்ளேயார், திருப்பிரம புரத் திருக்கோயிலிலுள்ள சிரம தீர்த்தத்துள் மூழ்கி நியமங்கள் செய்யும் தம் தந்தை யாரைக் காணப் பெருது அத்தீர்த்தக்கரையில் நின்று 'அம்மே அப்பா’ என அழைத்து அழுதருளியபோது இறைவன் அம்மையப்பராக விடைமீது எழுந்தருளி வந்து பிள்ளையார்க்கு ஞானபோனகம் அருத்தியருள. அதன் பயனாக உளங்குளிர்ந்து பாடிய தோடுடைய செவியன்’ என்னும் பனுவலும், திருக்கோலக்காவில் பொற்ருளம் பெறப் பாடிய மடையில் வாளே” என்ற பதிகமும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் வேண்டிக் கொண்ட வண்ணம் திருப்பதிகத்து இசையாழிலடங்கா வண்ணம் பாடிய மாதர் மடப்பிடி என்னும் யாழ்முரிப் பதிகமும், திருப்பாச்சி லாச்சிராமத்தில் கொல்லி மழவன் மகளைப்பற்றிய முயலகன் எனும் நோய்தீரப்