பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

பன்னிரு திருமுறை வரலாறு


பாடிய துணிவளர் திங்கள்’ என்ற பதிகமும், கொங்கு நாட்டிற் பணிநோய் நீங்கப் பாடிய அவ்வினே க் கிவ்வினையாம் என்னும் திருநீலகண்டப் பதிகமும், மதுரையிற் சமண ரொடு நிகழ்த்திய அனல் வாதத்தில் தீயிலிட்டும் வேவாது பச்சையாய் விளங்கிய போக மார்த்த பூண்முலையாள்" என்னும் பச்சைப் பதிகமும், திருவோத்துரில் ஆண்பனே பெண் பனே யாகும் வண்ணம் பாடிய பூத்தேர்ந்தாயன என்ற பதிகமும், திருவிழிமிழலேயிற் பெற்ற பழங்கா சின் வட்டம் தீரப் பாடிய வாசிதீரவே காசு நல்குவீர்” என்ற பதிகமும் இம் முதல் திருமுறையிலுள்ள அற்புதத் திருப்பதிகங்க

ளாகும்.

அன்புடைய அடியார்கள் கூறும் வேண்டுகோளேச் செவி மடுத்து இன்னருள் புரியும் அம்மையப்பனுக விளங்குவோன் எல்லாம் வல்ல முழு முதற் கடவுளே என வலியுறுத்தும் நிலையில் தோடுடைய செவியன்’ எனத் தொடங்கிய இம் முதல் திருமுறை, ஞானத் திரளாய் நின்ற அவ்விறைவன் திருவடிகளே மனத் தினுற் பேணிப் போற்றி வழிபடும் மெய்யடியார்கள் "இன்னெடு நன்னுலகெய்துவர் எய்திய போகமும் உறுவர்கள், இடர்பிணி துயர் அனேவிலரே என இத் திருமுறைப்பனுவல்களே உளமுருகி ஒதுவோர் எய்தும் பயன்களை அறிவுறுத்தும் இனிய திருப்பாடலுடன் நிறைவு பெற்றுளது.

இரண்டாந் திருமுறையில் இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ் வழி என்னும் ஆறு பண்களில் அடங்கிய நூற்றிருபத் திரண்டு திருப்பதிகங்கள் முறைப்படுத்தப் பெற்று உள்ளன. ஒவ்வொரு பண்களிலும் அவற்றுக்குரிய பல கட்டளேகளிலும் திருஞான சம்பந்தப் பிள்ளேயார் திருவவதாரம் செய்த திருப்பதியாகிய சீகாழிப் பதிக்