பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 4伊窝

என்னும் ஒன்பது பண்களுக்குரிய நூற்றிருபத்தைந்து, பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. சிவத்தலங்கள் எல்லா வற்றிலும் முதலில் ைவத்து எண்ணத்தகும் சிறப்புடை. யது. சிவநெறிச் செல்வர்களால் கோயில்' என வழங்கப் பெறும் தில்லேச் சிற்றம்பலமாதலின் அத்தலத்துக்குரிய தும் காந்தாரபஞ்சமப்பண் அமைந்ததுமாகிய ஆடி னுய் நறு நெய்யொடு பால் தயிர்' என்ற திருப்பதிகம் இத்திருமுறையின் முதற்கண் வைக்கப்பெற்றது. இத் திருப்பதிக த்தை யடுத்துக் காந்தாரபஞ்சமம் என்னும் இப் பண்ணுக்குரிய பந்துசேர் விரலாள்" என்னும் முதற் குறிப்புடைய திருப்பூந்தராய் (சீகாழி)த் திருப் பதிகம் அமைந்துளது. இவ்வாறே முதற்றிருமுறையில் குறிஞ்சிப்பண்ணின் இரண்டாம் கட்டளேயாக அமைந்த திருப்பதிகங்களில் கற்ருங் கெரியோம்பி’ என்னும் தில் லேத்திருப்பதிகம் முன்னும நல்லார் தீமேவும் என் னும் சீகாழித் திருப்பதிகம் பின்னும் அமைந்திருத்தல் காணலாம். ஆளுடைய பிள்ளே யார் திருப்பதிகங்களில் முற்குறித்த இரண்டிடங்களைத் தவிர ஏனைய எல்லாப் பண்களிலும் கட்டளைகளிலும் சீகாழிப் பதிக்குரிய திருப்பதிகங்களே முதலிடம் பெற்றிருத்தல் அறியத் தக்கதாகும், ஆளுடையபிள்ளையார் திருநல்லூர்ப் பெருமணத்தில் தம் திருமணங் காணவந்தோர் அன வரையும் உடனழைத்துக்கொண்டு திருப்பெருமன்த் திருக்கோயிலில் தோன்றிய ஈறில் பெருஞ்சோதியி னுள்ளே புகும்பொழுது பாடியருளிய திருப்பதிகம் கல்லூர்ப் பெருமணம் வேண்டா என்னும் முதற் குறிப் புடைய பனுவலா தலின், அதனே மூன்றந் திருமுறை யின் முடிவுத் திருப்பதிகமாகவும் அப்பதிகத்திற்குரிய அந்தாளிக்குறிஞ்சி என்ற பண்ணினே அத்திருமுறை யின் இறுதிப் பண்ணுகவும் முன்னுள்ள சான்ருேர் முறைப்படுத்தியுள்ளார்கள்.

திருஞானசம்பந்தப் பிள் ாேயார், தமக்கு உப தயனச் சடங்கு நிகழ்ந்தபோது, மறை நான்கும்