பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

பன்னிரு திருமுறை வரலாறு


(25) பஞ்சமம், (37) நட்டபாடை, (38) அந்தாளிக் குறிஞ்சி, (41) காந்தாரம், (46) பழம்பஞ்சுரம், (47) மேகராகக்குறிஞ்சி (49) கொல்லிக்கெள வானம், (54) பழந்தக்கராகம் (6.1) குறிஞ்சி, (62) நட்டராகம், (64) வியாழக்குறிஞ்சி, (69) தக்கேசி (70) கொல்லி, (73) இந்தளம், (76) காந்தாரபஞ்சமம், (80) கெளசி கம், (31) பியந்தைக் காந்தாரம், (82) சீக மரம், (98) சாதாரி என இருபத்திரண்டு பண்கள் திருஞான சம்பந்தர் அருளிய முதல்மூன்று திருமுறைகளிலும் இடம்பெற்றுள் ளன. திருமுறைகண்ட புராணத்தின் படி அச்சிடப்பெற்று வழங்கும் தேவாரப் பண் முறைப் பதிப்பில் முதற் றிருமுறையில் 45-ம் திருப்பதிகமாக அமைந்த துஞ்சவருவார்' என்னும் முதற்குறிப்புடைய திருவாலங்காட்டுத் திருப்பதிகம் தக்கராகப் பண்ணுக் குரியதாகக் குறிக்கப்பெற்றுளது. அத் திருப்பதிகம் மூன்ருந் திருமுறையில் ஏழாவது பண்ணுக அமைந்த பழம்பஞ்சு ரத்தில் ஆளுடைய பிள்ளேயாரால் அருளிச் செய்யப்பெற்றதாகும். துஞ்சவருவார்’ எ ன் ேற எடுத்த ஓசை சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்...பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொளப் பாடினர்' என ச் சேக்கிழாரடிகள் தெளிவாகக் குறிப் பிடுதலால் துஞ்சவருவார்’ என்னும் இத்திருப்பதிக த் திற்குரிய பண், நூற்றுமூன்று பண்களுள் 46 என்னும் எண் பெற்ற பழம்பஞ்சுரமே என்பதும், இப்பொழுது முதல் திருமுறையில் தக்க ராகப் பண்ணில் சேர்க்கப் பெற்றுள்ள இப்பதிகம் சேக்கிழாரடிகள் காலத்தில் மூன்ருந் திருமுறையில் பழம்பஞ் சுரப் பண்ணே ச் சார்ந்த திருப்பதிகங்களுடன் சேர்க்கப்பெற்றிருத்தல் வேண்டுமென்பதும் நன்கு துணியப்படும். எனவே ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்கள்

அ ட ங் கி ய முதல் மூன்று திருமுறைகளிலும்

1. பெரிய, திருஞானசம்பந்தர் புராணம் 1010-ஆம் செய்யுள்.