பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 409

பழந்தமிழ்பண்களாகிய நூற்றுமூன்று பண்களுள் மேற் குறித்த இருமத்திரண்டு பண்கள் அமைந்துள்ளமை இனிது புலனும்.

ருநாவுக்கரசர் அ ரு எளிய திருப்பதிகங்களில் பண்ணமைந்த பதிகங்கள் அனைத்தும் நான்காந் கிருமுறையென ஒன்ருகவும், திருக்குறுந்தொகைப் பதிகங்கள் அனைத்துல் ஐந்தாந் திருமுறையென ஒன்ற கவும் திருத்தாண்டகப் பதிகங்கள் அனைத்தும் ஆருந் திருமுறையென ஒன்ருகவும் இ வ் வ று மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றன. தம்மைப்பற்றி விருத்திய சூலேநோயினைப் பொறுக்கலாற்ருது சமண சமயத்தைத் துறந்துபோந்த மருள் நீக்கியார், தம் தமக்கையார் திலகவதியாரைப் பணிந்து திரு நீ றணிந்து திருவ தி கை வீரட்டானத்திறைவரை இறைஞ்சி உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற்று முதன்முதற் பாடிய திருப்பதிகம் கூற்றயின வாறுவிலக்ககிலீர்’ என்பதாகும். திருநாவுக்கரசரால் முதலிற் பாடப்பெற்றமை கருதி இது நான்காந் திரு முறையின் முதலாந் திருப்பதிகமாக அமைக்கப் பெற்றது. இப்பதிகத்திற்குரிய பண் கொல்லி என்ப தாகும். எனவே கொல்லிப் பண்ணமைந்த பதிகங்கள் இதனேச் சாரவைக்கப்பெற்றன. கொல்லி, காந்தாரம், பியந்தைக்காந்தாரம், சாதாரி, காந்தாரபஞ்சமம், பழந் தக்கராகம், பழம்பஞ்சுரம், இந்தளம், சீக மரம், குறிஞ்சி என்னும் பத்துப் பண்களும், திருநேரிசை, திருவிருத்தம் எ ன் னு ம் யாப்பியல் விகற் பமும் அமைந்த திருப்பதிகங்கள் இந் நான்காந் திருமுறை யில் முறையே தொகுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் திருநேரிசை, திருவிருத்தம் என்பவற்றை முறையே நேரிசைக் கொல்லி யெனவும் விருத்தக் கொல்லி யென வும் கொல்லிப்பண்ணில் அடக்குதல் மரபு.