பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

பன்னிரு திருமுறை வரலாறு


திருநேரிசை யென்பது,

கூவிளம் புளிமா தே மா கூவிளம் புளிமா தே மா என வரும் கட்டளையடியினே யுடைய செய்யுளாகும். அறு சீர்களால் இயன்ற இக் கட்டளையடியில் முதற் சீரும் நான்காஞ் சீரும் ஒரோ வழிக் கருவிளம் ஆதலும், இரண்டாஞ் சீரும் ஐந்தாஞ் சீரும் தேமாவாதலும் உண்டெனவும், மூன் ருஞ் சீரும் ஆருஞ் சீரும் எப்பொழுதும் தேமாவாயே நிற்பன எனவும் இதன் யாப்பமைதியினை விளக்குவர் யாழ் நூலாசிரியர்." நேரிசை என்னும் இப்பெயர், மே ற் கு றி த் த அறுசீர்க்கட்டளையடியால் அமைந்த யாப்பினே க் குறிப் பதுடன் அதனைப் பாடுதற்கமைந்த சுத்தாங்கமாகிய இசையமைப்பினையும் புலப் ப டு த் தும் முறையில் அமைந்திருத்தல் காண லாம்.

  • நேரிசையாக அறுபதம் முரன்று 1-75-3 எனவும்,

'நீணமார் முருகுண்டு வண்டினம் நீலமா மலர் கவ்வி நேரிசை

பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டுர்’ 2-53-10

எனவும் வரும் ஆளுடைய பிள்ளே யார் திருப்பாடல் களில் நேரிசை என்னும் இவ்விசையமைப்பு குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இக்குறிப்புக்களை ஊன்றி நோக்குங்கால், வண்டுகள் நறு மலர்களில் மகரந்தப் பொடியையும் தேனையும் மாந்தி அம்மலர்க ளிற்படிந்து இடையீடின்றி முரல்வது போலும் நேசிய இசை யமைந்த திருப்பாடல்கள் நேரிசை என்ற பெயர் பெறு: வன என்னும் நுட்பம் இனிது புலகுைம். சிவபெரு மானுக்கு உவப்பை விளேக்கும் பண்களுள் கொல்லிப் பண்ணும் ஒன்றென்பதனே,

கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனரே'

4-49-இ

1. யாழ் நூல், பக்கம் 217.