பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகண்ட சோழன் 25

T. W. சதாசிவ பண்டாரத்தாரவர்கள் ஆராய்ந்து கண்ட முடிபாகும். '

திருமுறைகண்ட புராணத்தின் இறுதிச் செய்யு ளில் "திருத்தொண்டர்பதம் துதிப்பாம்” என அந் நூலாசிரியர் தோற்றுவாய் செய்துகொண்டதற்கேற்ப அவ்வாசிரியராற் பாடி மு டி க் க ப் பட்ட நூல், திருத்தொண்டர் புரான சாரம் என்பதாகும். இது திருத்தொண்டர் புராண மென்னும் பெயருடைய பெரிய புராணத்தின் சாரமாக அமைந்தமையால் திருத்தொண்டர் புராண சாரமென்னும் பெயருடைய தாயிற்று. இந்நூலின் சிறப்புப் பாயிரமாக அமைந்த பாடற் பகுதியில் "அல்லலறுத்தெனேயாண்ட சைவ சிகாமணியார் அருட்புலியூர் உமாபதியார் அருள் செய்தாரே என வருதலால் திருத்தொண்டர் புராண சாரமென்னும் நூலினே இயற்றிய உமாபதி சிவாசாரி யாரே திருமுறைகண்ட புராணத்தையும் இயற்றியவ ரென்பது ந ன் கு பெறப்படும். திருத்தொண்டர் புராண சாரத்தையடுத்துக் காணப்படும் திருத் தொண்டர் புராண வரலாறென்னும் சேக்கிழார் புராணத்தைப் பாடியவரும் இப் பெரியாரேயாவர். இச் செய்தி,

திருக்கிளரும் கயிலேமலைக் காவல் பூண்ட

செல்வமலி திருநந்தி மரபில் வந்து கருக்குழியில் எமைவிழா தெடுத்தாட் கொள்ளுங்

கருணைமிகு மெய்கண்ட தேவர் தூய மருக்கிளர் தாள் பரவும் அருணந்தி தேவர்

மகிழும் மறை ஞானதே வருக்கன்பாகி இருக்கும் உமாபதிதேவர் சேக்கிழார் தம்

இசைப்புரா ணம் முரைத்தார் என்பமாதோ. என வரும் சேக்கிழார் புராணச் சிறப்புப்பாயிரப் பாட லால் இனிது விளங்கும். இங்ங்னமாகவே சைவத் திரு முறைகள் பன்னிரண்டின் வரலாற்றையும் விளங்க விரித்தருளிய பெரியார் கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியாரே என்பது நன்கு பெறப்படும்.

2. செந்தமிழ் - தொகுதி 45, பக்கம் 7-15.