பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

பன்னிரு திருமுறை வரலாறு


வசீனப் பிரிந்து இருள்தருமா ஞாலத்தே இருத்தல் தம்மாற் பொறுத்தற்கரிய துன்பமாதலையும், ஆருயிர் நாயகனகிய அவனே யடைந்து இன்புறுதற்குத் தடை யாயின. இவை யென்பதனையும் தம் பெருமா கிைய இறைவனே நோக்கி விண்ணப்பஞ் செய்யும் முறையில் கட்டளைக் கலித்துறையாப்பில் அருளிய பனுவல் திரு விருத்தம் என்ற பெயரால் வழங்குதல் இங்கு நினைக்கத் தகுவதாகும்.

தொல்காப்பியச் செய்யுளியலின்படி தரவு கொச்ச கம் என்றும், பிற்கால யாப்பிலக்கண அமைப்பின்படி கட்டளேக் கலித்துறை என்றும் கூறப்படும் செய்யு, ளமைப்பில் திருநாவுக்கரசர் பாடிய திருப்பாடல்களே ச் சேக்கிழாரடிகள் திருவிருத்தம் என்ற பெயராற் குறித் துள்ளார். எனவே இத்திருப்பதிகங்களுக்குத் திரு. விருத்தம் என்ற இப்பெயர், ஆசிரியர் சேக்கிழார் காலத் திற்கு முன்னரே நிலேபெற்று வழங்கிய பழமையுடைய தென்பது நன்கு தெளியப்படும்.

சமண சமயத்தைச் சார்ந்த மருள் நீக்கியார், த - ம் சூலே நோயினுற் படும் துயரத்தைப் பொறுக்கலாற்ருது அச் சமயத்தை விட்டு நீங்கித் திருவதிகையை யடை ந்து, தம் தமக்கையார் அளித்த திருநீற்றினப் பூசி அதிகை வீரட்டானத்து எழுந்தருளிய பெருமானப் பணிந்து உரைத்தமிழ் மாலைகள் சாத்தும் -- உணர்வு பெற்று. முதன்முதற் பாடியருளிய கூற்ருயினவாறு விலக்ககிலீர்’ என்னும் திருப்பதிகமும், தம் சமயத்தை வளர்த்த தருமஆேனர் சைவராயினமை கண்டு பொருது வெகுண்ட சமணர்கள், தம் சமயச் சார் புடைய பல்லவ மன்னன் துணைகொண்டு i_ 6) 550) 3; யின்னல்களேச் செய்பவர் திருநாவுக்கரசரை யானே யால் இடறச் செய்தபொழுது தம்மைக் கொல்லவந்த யானே யைக் கண்டு சிறிதும் கலங்காது. இறைவன்