பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 4 : 7

(1) நாக நாறு நரந்தை நிரந்தன

ஆவு மார மு மோங்கின. வெங்கனும் சேவு மாவுஞ் செறிந்தன கண்ணுதல் பாக மாளுடை யாள்பலி முன்றிலே.

(2) செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்

கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந் திங்கள் வாழ்சடை யாடி ரு முன்றிலே.

(3) மரவம் பாதிரி புன்னே மrைங்கமழ்

குரவங் கோங்க மலர்ந்தன கொம்பர்மேல் அரவ வண்டின மார்த்துட னியாழ்செயும் திருவ மாற்கிளே யாடிரு முன் றிலே.

எனச் சிலப்பதிகாரம் வேட்டு வ வரியில் வந்துள்ள வரிப் பாடல்கள், இக்குறுந்தொகை யாப்புக்குரிய பழைய இலக்கியங்களாகக் கொள்ள த் தக்கன.

'அன்னம் பாலிக்குந் தில் லேச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னன் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோ இப் பிறவியே.’

எனத் திருநாவுக்கரசர் பாடியருளிய திருக்குறுந் தொகைப் பாடலேயும் மேற் காட்டிய வேட்டுவ வரிப் பாடல்களேயும் ஒப்புநோக்குவார்க்கு அப்பரடிகள் அருளிய இக்குறுந்தொகையாப்பு இளங்கோவடிகள் வாழ்ந்த காலப்பகுதி யாகிய கி. பி. இரண்டாம் நூற்ருண்டிலேயே நாட்டிற் பரவிவழங்கிய தொன்மை யுடையது என்பது நன்கு புலகுைம்.

ஒருமா கூவிளம் கூவிளம் கூவிள்ம்

என்பது திருக்குறுந்தொகை யென்னுஞ் செய்யுளின் கட்டளையடியாகும். முதற்சீர் தேமாவாயின் அடியின் எழுத்துத் தொகை ஒற்று நீக்கிப் பதினுென் ரும் ,