பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

பன்னிரு திருமுறை வரலாறு


புளிமாவாயின் பன்னிரண்டாம். ஒரடிக்குள் அமைந்த மூன்று தளைகளுள், முதற்றளே நேரொன் ருசிரியத்தளே: இரண்டு மூன்றும் வெண்டளேகள். மேற்குறித்த எழுத் துக் கணக்கும் தளேயமைதியும் வேறுபடாது நிற்கச் சீர்கள் வேறுபட்டு வரலாம்’ என இக்குறுந்தொகை யாப்பின் அமைப்பினை விளக்குவர் யாழ் நூலாசிரியர்." பத்தெழுத்து முதல் பதின்ைகெழுத்தளவும் பெற்று வரும் அளவடியாகிய நாற்சீரடியுள் பதினென்றும் பன்னிரண்டுமாகக் குறைந்த எழுத்துக்களேப் பெற்று வருவன இப்பாடல்களாதலின் இவை குறுந்தொகை யெனப்பெற்றன.

சிவபெருமான் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியுள்ள திருத்தலங்களேயெல்லாம் கண்டிறைஞ்சிக் கைத்திருத்தொண்டு செய்யும் கடமையினே மேற் கொண்ட திருநாவுக்கரசடிகள், இ ைற வ ன து பேரருளே நினைந்து ஒரு தலத்திலிருந்து மற்ருெரு தலத் திற்கு நடந்துசெல்லும்பொழுதும் அவ்வத் தலங்களி லுள்ள திருக்கோயில்களே அடைந்து உழவாரத் தொண்டு முதலிய திருப்பணிகளைச் செய்யும்போதும்’ தம் பெருமாகிைய இறைவனே முன்னிலையாக்கிப் போற்றும் நிலையிலும் , அவ்விறைவனது பொருள்சேர் புகழை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் நிலையிலும் —. யாழ்நூல், பக்கம் 210.

1. “அளவடி நான்கின ஆலிவிருத் தம்மே” (யாப்பருங் கலம், செய்யுளியல் சூத்-89) என்னும் பிற்கால யாப்பிலக் கன விதியை யொட்டி இத் திருக்குறுந்தொகையைக் கலி விருத்தம் என்ற பாவினத்துள் அடக்குவாரும் உளர்.

2. பெரிய-திருநாவுக்கரசர்-174. 3. பெரிய-திருநாவுக்கரசர்-171. 4. $为 ፶ጋ 269, 5. தொழற்பாலதே’ என்னும் திருக்குறுந்தொகை முதலிய திருப்பதிகங்களின் பாடல் அமைதியை நோக்கி யுணர்க.