பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைப் பயிற்சி

நம்பியாண்டார் நம்பி திருமுறைகளே வகுக்குங் கால் மூவர் திருப்பதிகங்களேயும் முன்போலவே ஏழு திருமுறைகளாகவே வகுத்தார் எனத் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது. எனவே மூவர் திருப் பதிகங்களும் நம்பியாண்டார் நம்பியின் காலத்திற்கு முன்பே ஏழு பகுதிகளாக வகுக்கப்பட்டிருந்தன என் பது நன்கு பெறப்படும். திருஞான சம்பந்தப்பிள்ளே யார் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களே அவருடன் சென்ற அடியார்கள் எழுதியும் பாடியும் வந்தனரென் பது வரலாறு. மதுரையில் சமணரொடு வாது செய்யக் கருதிய ஆளுடைய பிள்ளேயார், தாம் பாடிய திருப் பாடல்களெழுதப்பெற்ற திருமுறையேட்டிற் க யி று சாத்திப் பார்த்து எரியிலிட்டு வெற்றிபெருதற்குரிய போகம!ர்த்த என்ற திருப்பதிகத்தினேத் தெரிந் தெடுத்த செய்தியும், மதுரையிற் சமணரை வாதில் வென்ற பிள்ளேயார் திருத்தெளிச்சேரியை அடைந்த நிலேயில் புத்தர்கள் கூட்டங்கூடித் தம் தலேவன் புத்த நந்தியுடன் சேர்ந்து பிள்ளேய ரது வரவைத் தடுத்த பொழுது, திருஞானசம்பந்தப் பிள் ாேயார் பாடியருளும் தேவாரத் திருப்பதிகங்களே எழுதி வரும் இயல்புடைய அடியாரொருவர், புத்தர் சமண் கழுக்கையர் எனத் தொடங்கும் பஞ்சாக்கரத் திருப்பாடலேப் பாடிப் புத்த நந்தியின் மேல் இடிவிழச் செய்தமையும் இவ்வுண் மையினே வலியுறுத்துவனவாகும். இவ்வாறே திரு நாவுக்கரசருடன் சென்ற அடியவர்கள் அரசர் பாடி யருளிய திருப்பதிகங்களே எழுதியிருத்தல் வேண்டும். இவ்விரு பெருமக்களும் இறைவன் திருவருளிற் கலந்த பின்னர்ச் சீகாழிப் பதியிற் பிறந்த கனநாத நாயன ரால் ஆதரிக்கப்பெற்ற சிவனடியார்கள், அருளாசிரியர் பாடிய திருமுறைகளே எழுதியும் வாசித்துப் பொருள் கூறியும் போற்றிக் காவல் செய்துள்ளார்கள். இவ்வடி