பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 437

படைத் தான்’ என்பதாகவின், அஃது இவ்வேழா ந் திருமுறையின் இறுதிக்கண் வைக்கப்பெற்றது.

திருவெண்ணெய்நல்லூரில் அருட்டுறைப்பெருமா ல்ை தடுத்தாட்கொள்ளப்பெற்ற நம்பியாரூரர், அப் பெருமானது திருவருளின்பத்தில் திளேத்துப்போற்றிய பிேத்தா பிறைசூடி பெருமானே அருளாளா என்ற திருப்பதிக த்தினே முதலாகக்கொண்டு தொடங்கிய இவ்வேழாந்திருமுறை, சேரமான் தோழராகிய சுந்தரர் இறைவனது அருளிப்பாட்டின் வண்ணம் திருவஞ்சைக் களத்திலிருந்து வெள்ளானே யின் மீதமர்ந்து திரு நொடித்தான் ம லே ய கி ய திருக்கயிலாயத்தை யடைந்து தாம் பெற்ற திருவருளின் பத்தை நிலவுலகத் தார்க்குப் புலப்படுத்தும் நிலையில் ஆழிகடலரையனுகிய வருணனை நோக்கித் திருவஞ்சைக்களத்தப்பருக்கு அறி விக்கும்படி பணித்த திருப்பாடலுடன் நிறைவு பெற்றி ருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

நூறு திருப்பதிகங்களால் இயன்ற இத்திருமுறை யில், தென்றமிழ்ப் பயனுய் வந்த திருத்தொண்டத் தொகை முப்பத்தொன் பதாம் திருப்பதிகமாகவும், திருவைந்தெழுத்தின் சிறப்பினே யுணர்த்தும் நமச்சி வாயத்திருப்பதிகம் நாற்பத்தெட்டாம் பதிகமாகவும் அமைந்திருத்தல் காணலாம். சிந்தையின் தெளி வினேப் புலப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது பஞ்சமம் என்ற பண்ணுகும். சிந்தையில் தெளிவுடையோர் பஞ்சமம் என்னும் இப்பண்ணில் பரமனேப் பாடி மகிழ்வர். "பஞ்சமம் பாடியாடும் தெள்ளியார் கள்ளந் தீர்ப்பார்?' என்பது திருநாவுக்கரசர் வாய்மொழி. திருவஞ்சைக் களத்துப் பெருமானேப் பாடி போற்றும் நிலையில் .ெ வ று த் ேத ன் மனே வாழ்க்கையை விட்டொழிந்தேன்’ என்னும் தெளிவுடைய சிந்தை யினராகிய நம்பியாரூரர், அஞ்சைக்களத்திறைவர் பால் விடைபெற்றுத் திருநொடித்தான்மலையை நோக்கிச் செல்லும் பொழுது சிந்தையும் தெளிவுமாகித் தெளிவி

1. 4-2.9-3.