பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

பன்னிரு திருமுறை வரலாறு


னுட் சிவமுமாகி' என்றவாறு சிவபரம்பொருளேத் தியானிக்கும் நிலையிற் பாடிய தானெ இனமுன் படைத் தான்’ என்ற பதிகம் ப்ஞ்சமம் என்ற பண்ணில் அமைந்திருத்தல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

2. யாப்பமைதி தெய்வஞ்சுட்டிய வாரப் ாடல் (இசைப்பாடல்). தேவாரம் என வழங்கப்பெற்றமை முன்னர் விளக்கப் பெற்றது. இயல் இசைத் தமிழ்ப் பாடலாகிய இத் தேவாரத் திருப்பதிகங்களின் செய்யுள் அமைப்புப் பற்றியும் இசையமைப்புப் பற்றியும் ஒரளவு அறிந்து கொள்ளுதல் இங்கு ஏற்புடையதாகும்.

நமக்குக் கிடைத்துள்ள தமிழ்நூல்களில் மிகவும் தொன் மையும் சிறப்பும் வாய்ந்த இயற்றமிழிலக்கண நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும். இடைச்சங்கப் புலவர்களாலும் கடைச் சங்கப் புலவர்களாலும் போற்றிப் பயிலப்பெற்ற இந்நூல், தமிழ்மொழியின் இலக்கண வரம்பினேப் பேணிக்காக்கும் ஆற்றல் வாய்ந்த கனிமுதல் நூலாகக் கி.பி.பத்தாம் நூற்ருண்டு வரை மேற்கொள்ளப்பெற்றதென்பது, தமிழ் இலக்கிய வரலாற்ருராய்ச்சியாளர் அனைவர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இயற்றமிழ் முதல் நூலாகிய இத்தொல் காப்பியத்தினைப் பெரும்பாலும் அடியொற்றியும் சிற்சில பகுதிகளில் முழுவதும் வேறுபட்டும் பிற்காலத்தில் தோன்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், பன்னிருபாட் டியல் முதலிய இலக்கண நூல்கள் தேவார ஆசிரியர் கள் காலத்திற்கு மிகவும் பிற்பட்டனவாதலின், அவ்விலக்கண நூல்கள் தேவாரத் திருப்பதிகங்களின் யாப்பமைதி முதலியவற்றை அறிதற்குச் சிறிதும் துனே செய்வன அல்ல என்பதும், பண்டைத்தமிழியல் நூலாகிய தொல்காப்பியச் செய்யுளியலிற் கூறப்பட்ட

2, 4–49–6.