பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 4霹雳

யாப்பினும் .ெ பா ரு எளி னு ம் வேற்றுமையுடையது, என்பதற்குத் தேவபாணியும் காமமுமேயன்றி வீடும் பொருளாம் என்பது ஆசிரியர் கருத்தாயிற்று' எனவும், பதிகப்பாட்டிற்கு ஈண்டுக்கூறிய வேறுபாடு கள் திருவாய்மொழி, திருப்பாட்டு, திருவாசகம் என் கின்ற கொச்சக ஒரு போகுகளிற் காண்க. அவை உலக வழக்கன்மையிற் காட்ட மாயினும்" எனவும் நச்சினர்க்கினியர் குறித்துள்ளார்.

இக்குறிப்புக்களேக் கூர்ந்து நோக்குங்கால் ஈண்டு அவ்வாசிரியரால் திருப்பாட்டு என்ற பெயராற் குறிக்கப்பெற்றவை திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர்,சுந்தரர் ஆகிய மூவரும் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களே என்பதும், திருமுறை ஆசிரியர்களும் திவ்யப் பிரபந்த ஆசிரியர்களும் அருளிய திருப்பதிகங் கள் தொல்காப்பியச் செய்யுளியலின்படி கொச்சக ஒரு போகு என்னும் யாப்பு வகையைச் சார்ந்தன என்ப தும், இத் திருப்பதிகங்கள் ஒரு பொருள்மேல் மூன் றடுக்கி வரும் ஒத்தாழிசைகளேப் போன்று பொரு ளமைப்பில் ஒரு நிகரணவாய்ப் பத்தும் பதினென்றும் பன்னிரண்டும் ஆ கி ய பாடல்களையுடையவாய் வருமென்பதும், ஆசிரியர் தொல்காப்பியனுர் அற முதலாகிய மும்மு தற்பொருள் எனக் குறித்த உறுதிப்பொருள் மூன்றனுள் ஒன்ருகிய இன்பத்தினைப் பின்னுள்ளோர் காதற்காமமாகிய இவ்வுலக இன்பமும் வீடுபேருகிய பேரின் பமும் என இரண்டாக்கி உறுதிப் பொருள் நான் கெனக்கொண்டனராதலின் அவ்வகை யால் நோக்குமிடத்துத் தேவர்ப்பராவிய இத்திருப் பதிகங்கள் உலக இன்பம் என்ற அளவிலன்றிப் பேரின்பமாகிய வீடுபேற்றினேப் பொருளாகக்கொண்டு பாடப்பெற்றன எனக் கொள்ளுதல் வேண்டும் என்ப தும், அறிவனுாற்பொருளும் உலகநூல் வழக்கும் என

á • சீவக சிந்தாமணி கடவுள் வாழ்த்து நச்சிளுர்க்

கினியர் உரை. 2. தொல் - செய்யுள் - 149ஆம் சூத்திரம்.

  • 3: