பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 433

களின் கருத்தாகும். தேவார ஆசிரியர் மூவருள் ஒருவ ாாகிய ஆளுடைய பிள்ளேயார், தாம் பாடியருளிய சந்தப் பாடல்களேயெல்லாம் இயற்றமிழில் கலிப்பா வின் வகையுள் அடக்கி ஒதியுள்ளமை இங்கு நோக்கத் தகுவதாகும்.

அந்தண்பூங் கச்சி யேகம்பனே யம்மானே க் கந்தண்பூங் காழியூரன் கலிக்கோவையால் சந்தமே பாடவல்லதமிழ் ஞானசம் பந்தன்சொற் பாடியாடக் கெடும் பாவமே,

என ஞானசம்பந்தப் பிள்ளே யார் பாடிய திருக்கடைக் காப்புப் பாடல், “ கவிக்கோவையால் சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன் ” என அவரைச் சிறப்பித் துப் போற்றுதலால், அவர் திருவாய் மலர்ந்தருளிய சந்தமலி செந்தமிழ்ப் பதிகங்கள் யாவும் கலிப்பாவின் வகையைச் சார்ந்தன எனத் தெளிவாகப் புலனுதல் காணலாம்.

இனி, இசைத்தமிழ் நூல்களில் இசைப்பாவுக்குரிய இயல்புகளாகக் கூறப்பட்டவற்றுள் தேவாரத் திருப் பதிகங்களுக்குப் பொருத்துவன எல்லாம் இங்கு இயைத் துரைக்கத்தக்கனவாம். இயல் நலமும் இசை நலமும் ‘ஒருங்கு வாய்ந்த இனிய பாடல்களே இசைப்பா என வும் இசையளவுபா எனவும் இரு வகையாகப் பகுத் துரைத்தல் மரபு. நல்லிசைப் புலவரால் முதன்முதல் இயற்றப்பெறும்பொழுதே இயல்வளமும் இசை நலமும் ஒருங்கு அமையப் பாடப்பெற்ற இனிய பாடல்களே இசைப்பா எனப்பெறும். புலவரால் முதற்கண் இயலள விற் பாடப்பெற்றுப் பின் இசைவல்லாரால் இசை யமைத்துக் கொள்ளுதற்கேற்ற சீர் நலம் வாய்ந்த செய்யுட்கனே இ ைச ய ள வு பா என்பர். இவ் விசைப்பாக்கள் பெரும்பான்மையும் இ ய ற் ற மி ழ்

1. சிலப் - கடலாடு 35. அடியார்க்கு நல்லார் உரை.