பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 443

எனவும்.

கோங்கமே குரவமே கொழுமலர்ப்புன்னேயே

கொகுடிமுல்லே வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும் ஓங்குமா காவிரி வடகரை யடை குரங் காடுதுறை வீங்குநீர்ச் சடைமுடி படிகளார் இடமென

விரும்பினரே' (3–91–1) எனவும் ஆளுடையபிள்ளையார் பாடிய திருப்பாடல்கள் காவிரியாற்றின் வளத்தினே இசையொடு தெய்வ நலமும் பொருந்தப்போற்றுவனவாகும்.

கடற்கரைத் தலங்களைப்பற்றிய தேவாரத் திருப் பதிகங்களில் கடற்கானலின் கருப்பொருள்களையும் உரிப்பொருள்களேயும் விரித்துரைக்கும் பகுதிகள் கானல்வரியின் தொடர்புடையனவே.

கலவஞ்சேர் கழிக்கானல் கதிர் முத்தங் கலந்தெங்கும் அலவஞ்சே ரணேவாரிக் கொணர்ந்தெறியு

மகன்றுறைவாய் நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடும் திலகஞ்சேர் நெற்றியினர் திருவேட்டக் குடியாரே !

(3–68–4) என வரும் திருஞானசம்பந்தர் தேவாரமும்,

' வனபவள வாய் திறந்து வானவர்க்குந் தானவனே

யென் கின்ருளால் சினபவளத் திண்டோன் மேற் சேர்ந்திலங்கு

வெண்ணிற்ற னென்கின்ருனால் அனபவள மேகலையோ டப்பாலேக் கப்பாலான்

என்கின் ருளால் கனபவளஞ் சிந்துங் கழிப்பாலேச் சேர்வானேக் கண்டாள்

கொல்லோ ?

(4–6–1)