பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

பன்னிரு திருமுறை வரலாறு


இவை பதினறும் நான்கெழுத்தால் வரும் விருத்த அடி களாம். இவ்வாறே ஐந்து முதலிய எழுத்துக்களால் வரும் அடிகளேயும் இங்ஙனம் சந்தக்குழிப்பில் வைத்துப் பெருக்கிக் காணலாம்.

கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார் பேணுர் அல்லோ நாமே.

இத்திருப்பாடல் தான தான’ என்னும் நான்கெழுத்தா லாகிய அடிகளால் இயன்றதாகும்.

கருவார் கச்சித் திருவே கம்பத் தொருவா வென் ன மருவா வினேயே.

இது, தன ைதான ’ எனும் ஐந்தெழுத்தாலாகிய அடி களால் அமைந்ததாகும். இதன் ஈற்றடி தனணு தனன என ஆறெழுத்தால் வந்தமை காண்க .

அரனே யுள் குவீர்

பிரம னுாருளெம் பரனே யேமனம் பரவி யுய்ம்மினே.

இது, தன ன தானஞ என ஆறெழுத்தால் அமைந்த அடிகளேயுடையதாகும். மணியார் முதுகுன்றைப் பணிவா ரவர்கண்டீர் பிணியா யினகெட்டுத் தணிவா ருலகிலே.

இது, தனனு தன தானு ' என்னும் ஏழெழுத்தாலாகிய அடிகளேயுடையதாகும். திருஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பாடல்கள் இருக்கு எனப் போற்றப்பெறும்