பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 45

நோக்குங்கால் இசைத்தமிழில் வழங்கும் கட்டளே’ என்ற சொல், செய்யுட்களில் அமைந்த ஒசைக் கூறு பாட்டினேயே குறிப்பதென்பது நன்கு துணியப்படும். ஒசை வகையாகிய இக்கட்டளை யமைப்பினே அடி யொற்றியே இசைப்பாடல்களின் தாளம் முதலிய பண்ணிர்மை அமைதல் இயல்பு. இ ந் நூ ட் ப ம் கட்டளைய கீதக் குறிப்பும்" என வரும் பழம் பாடற் ருெ டரால் நன்கு புலணுதல் காண்க.

ஆசிரியர் தொல்காப்பியனுர், பாக்களிற் பயிலும் அடிகளே அவற்றில் அமைந்த சீர் வகை பற்றியும், எழுத் தெண்ணியறிதற்குரிய கட்டளை யோசை பற்றியும் பகுத்துக் கூறியுள்ளார். இருசீரடி, குறளடி, மூச்சீரடி சிந்தடி, நாற்சீரடி நேரடி, ஜஞ்சீரடி நெடிலடி, அறுசீர் முதலாக வரும் அடிகள் கழிநெடிலடி எனப்படும். இங்ங்னம் சீர்களே அடிப்படையாகக் கொண்டு அமைந்த அடிகள் சீர் வகையடிகளாகும். இனி நாற் சீர்களால் ஆகிய அளவடிகளேயே ஒற்றும் குற்றியலிகர மும் குற்றியலுகரமும் நீக்கி நாலெழுத்து முதல் ஆறெழுத்துவரையமைந்த அடிகள் குறளடி எனவும், ஏழெழுத்துமுதல் ஒன்பதெழுத்தளவும். அமைந்த அடிகள் சிந்தடி எனவும், பத்தெழுத்து முதல் பதின்ை கெழுத்தளவும் அமைந்த அடிகள் நேரடி எனவும், பதி னேந்து முதல் பதினேழெழுத்தளவும் அமைந்த அடிகள் நெடிலடி எனவும், பதினெட்டு முதல் இருபதெழுத்தளவும் அமைந்த அடிகள் கழிநெடிலடி எனவும் ஆசிரியர் தொல்காப்பியனுர் ஐவகை யடிகளாகப் பகுத்துள்ளார்.

1. வட்டணயுந் தூசியு மண்டலமும் பண்ண மைய

எட்டுடன் ஈரிரண்டாண் டெய்தியபின்-கட்டளேயர் கீதக்குறிப்பும் அலங்காரமுங் கிளரச் சோதித் தரங்கேறச் சூழ். (சிலப்-அரங்கேற்று-அடியார்க்கு நல்லார் உரை

மேற்கோள்