பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுநைப் பயிற்சி ತ್ತಿ

விண்ணப்பஞ்செய்தற்கும் வேண்டும் நிவந்தங்களே வழங்கியுள்ளார்கள் .

திருமுறையாசிரியர்களாகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமி கள், திருமூலர், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடி வர்கோன், சேரமான் பெருமாள் ஆகிய அருளாசிரி யர்களேயுள்ளிட்ட அறுபத்து மூன்று தனியடியார் களின் வரலாறுகளேயும் தில்லேவாழந்தணர், முதலிய ஒன்பது தொகையடியார்களின் இயல்பினேயும் வகைப் படுத்துக் கூறுமுகமாகத் திருத்தொண்டர் திருவந் தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி, தேவார ஆசிரியர் களின் வரலாற்றினேயும் அவர்கள் திருவாய் மலர்ந் தருளிய திருப்பதிகங்களில் அமைந்த பொருள் நலங் களேயும் தம் நூல்களில் முதன்முதல் தொகுத்து விளக்கியுள்ளார். பல்வேறு திருத்தலங்களில் தனித் தனியே ஒதப்பெற்றுவந்த தேவாரத் திருப்பதிகங்களே யெல்லாம் ஒரு சேரத் தேடித் தொகுத்தற்கு நம்பி யாண்டார் நம்பியே துனேயாக இருந்தார் என்பதற்கு அவர் பாடிய நூல்களே சான்ருக அமைந்துள்ளன. இனித் திருமுறை வகுப்பினேக் குறித்து ஒரு சிறிது

ஆராய்வோம்

திருமுறைப் பாகுபாடு

மூவர் பாடிய தேவாரத் திருப்பதிகங்களே முன் போலவே ஏழு திருமுறைகளாக நம்பியாண்டார் நம்பி வகுத்தமைத்தபின், திருவாதவூரடிகள் அருளிய திரு வாசகம் எட்டாந்திருமுறையாக வைக்கப்பட்டது. திரு வாதவூரடிகள் பாடியருளிய திருச்சிற்றம்பலக் கோவை யைக் கோவைத் திருவாசகம் என வழங்கும் வழக் குண்மையால் திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை என்னும் இரண்டினேயும் திருவாசகம் என ஒன்ருகவே கொண்டு பண்டையோர் அந்நூல்களே எட்டாந் திரு முறையாக வகுத்தார்களெனத் தெரிகிறது. திருமாளி

1. சிவப்பிரகாசம், மதுரைச் சிவப்பிரகாசருரை.