பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பன்னிரு திருமுறை வரலாறு


கைத் தேவர் முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப் பாமாலே அவற்றையடுத்து ஒன்பதாந் திரு முறையாக வைக்கப்பட்டது. திருமூலர் திருவாய்மலர்ந்தருளிய திருமந்திர மாலே பத்தாந் திருமுறையாக வைக்கப் பட்டது. தி. வால் வாயுடையார், காரைக்காலம்மை யார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் , நக்கீரதேவர், கல்லாடதேவர், கபிலதேவர், பரன தேவர், இளம்பெருமான டிகள், அதிராவடிகள், திரு வெண்காட்டடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன் னிருவர் அருளிச் செய்த நாற்பது பிரபந்தங்களும் பதி னெராந் திருமுறையென ஒரு திருமுறையாகத் தொகுக் கப்பெற்றன. மேற்கூறிய பதிைெரு திருமுறைகளையும் நம்பியாண்டார் நம்பியே தொகுத்துதவினர் எனத் திருமுறைகண்ட புராணம் கூறுகின்றது

ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பாப் பதி கங்களிற் பல, நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த காலத் திற்கு நெடுங்காலம் பிற்பட்டுத் தோன்றிய ஆசிரியர் களாற் பாடப்பட்டனவாகும். இச்செய்தி கங்கை கொண்ட சோழேச்சரம், இராச ராசேச்சரம், திரை லோக்கிய சுந்தரம் முதலிய திருக்கோயில்களைப் போற்றிய திருப்பதிகங்களாற் புலனுகின்றது தம்காலத் திற்குப் பின்னர் வாழ்ந்த கருவூர்த்தேவர் முதலிய பெரி யோர்களாற் பாடப்பெற்ற திருவிசைப்பாத்திருப்பதி கங்களே நம்பியாண்டார் நம்பி ஒன்பதாந் திருமுறை யாக வரிசைப்படுத்துதற்கும் அதனேயடுத்துத் திருமந் திரத்தைப் பத்தாந்திருமுறையாக வைத்தற்கும் ஒரு சிறிதும் இயைபில்லேயெ ன்பது மேற்காட்டிய குறிப்பி ற்ை பெறப்படும். திருமுறைவகுத்த நம்பியாண்டார் நம்பியே தாம் போற்றிப்பரவும் முன்னேர் நூல்களுடன் தாம் இயற்றிய நூல்களையும் சேர்த்துப் பதினுெராந் திருமுறையென்ற பெயரால் ஒரு திருமுறையாகத் தொகுத்திருக்கமாட்டார். எனவே ஒன்பது முதல் பதினென்றுவரை அமைந்த திருமுறை வகுப்பு, நம்பி யாண்டார் நம்பியால் அமைக்கப்பெற்றதன்றென்பது நன்கு பெறப்படும். ஆகவே நம்பியாண்டார் நம்பியின்