பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 459

பதிகங்களில் அமைந்த கட்டளேகள் இரண்டு என்பது பெறப்படும். மேற் காட்டிய யாப்பு வகைகள் நான் கினேயும் கூர்ந்து நோக்குங்கால் அவற்றுள் முதல் இரண்டும் ஒரோசையாகவும் பின்னிரண்டும் மற்றேர் ஒசையாகவும் ஒசை வகையால் ஒத்து நிற்றல் புலனுகும். எனவே முதல் இரண்டு யாப்பு விகற்பங் களேயும் ஒரு கட்டளை யாகவும் பின்னிரண்டு யாப்பு விகற்பங்களேயும் மற்ருெரு கட்டளேயாகவும் அமைத்துக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

யாழ் முசி (136-ஆம் பதிகம்) முதற்றிருமுறையின் ஈற்றில் அமைந்துள்ள இப் பதிகம் இன்ன பண்ணிற்கு உரியதெனத் தெளிவாகக் குறிக்கப்பெறவில்லே. இது.

மாதர் மடப்பிடியும்-மட- அன்னமு மன்னதோர்

நடை - யுடைம் - மலே - மகள் துணையெனமகிழ்வர்

தான தனத்தனனு - தன - தானன தானன தன - தன - தன - தன தனத்ன தன:ை

என அடிமு தற்கண் தொடங்கிய இயலும் இசையும் அவ்வடிக்குள்ளேயே முரிந்து மாறுபடும்படி அமைந் தமையால் முரிவரி' என்னும் இசைப்பாவின் பாற்படுமென்பது முன்னர் விளக்கப் பெற்றது. ஆளுடைய பிள்ளேயார் அருளிய திருப்பதிகங்களின் இசை, அளவுபடா நீர் மையது என்பதனைத் தம் சுற்றத்தார்க்கு அறிவுறுத்த விரும்பிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், பிள்ளேயாரை வணங்கி யாழிலடங்கா வாறு ஒரு திருப்பதிகம் பாடியருளும்படி வேண்டிய நிலையில், பிள்ளையாரால் முரிவரியாக அருளிச் செய்யப் பெற்றது. இத் திருப்பதிகமாதலின் இது யாழ்முரி என்னும் பெயர்த்தாயிற்று. தாம் வேண்டிய படி யாழிலடங்கா வண்ணம் இப் பதிகம் பாடப் பெறுவது என்பதனே மறந்த திருநீலகண்டப்பெரும்