பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 47 |

இரண்டாந் திருமுறை

இதன் கண் இந் தளம், சீகாமரம், காந்தாரம், பிய ந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி என்னும் ஆறு பண்களுக்குரிய 122 திருப்பதிகங்கள் முறையே தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் 1 முதல் 39 முடிய அமைந்த பதிகங்கள் இந்தளப் பண்ணுக்கு உரியன வாகும். "தேவுவந்த ” இந்தளத்தின் செய்திக்கு நான்கு எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் இப்பதிகங்களில் அமைந்த கட்டளே விகற்பங்கள் நான் கென்பது பெறப்படும்.

இப்பதிகங்களில் உள்ள யாப்பு விகற்பங்களே முறையே காண்போம்.

இக்தளம்

யாப்பு 1

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் தான தானன தானன தானன தானகு

இதன் கண் முதற் சீராகிய தான ’ என்பது தனன, தந்த என ஆதலும், அடுத்த சீரின் முதலிலுள்ள நெட் டெழுத்துடன் இணைந்து தான ை ஆதலும், இரண் டாஞ்சீர் தன்ன ஆதலும், தந்ததன, தானதன என ஒரெழுத்து மிக்கு நிற்றலும் அமையும். 1 முதல் 10 வரை அமைந்த ப தி க ங் க ளி ன் பாடலமைப்பினே நோக்கியுணர்க.

யாப்பு 2

நல்லானே நான்மறை யோடிய லாநங்கம்

தேமாங்காய் கூவிளம் கூவிளம் தேமாங்காய்

இவ்வாறு முதற்சீறும் நான்காஞ்சீரும் காய்ச்சீர்களா கவும், இரண்டாஞ்சீரும் மூன்றஞ்சீரும் விளச்சீர்களா கவும், சிறுபான்மை மாச்சீர்களாகவும் அமைய