பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

பன்னிரு திருமுறை வரலாறு

இங்ங்னம் நாற்சீரடியால் வருவன 11 முதல் 16 வரை உள்ள திருப்பதிகங்களாகும்.

யாப்பு 3

நிலவும் புனலும் நிறைவா ளரவும் தனகு தனகு தனணு தனணு

எனவரும். சில இடங்களில் தனணு ' என்பது தான ’ என அமைதலும் ன்ைடு. 17 முதல் 24 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின.

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர வயரும் நறுமென் சாயல் முகமிென் கோயாம்,

எனச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் வரும் வரிப்பாடல் இக்கட்டளேக்குரிய தொன்மையிலக்கிய மாக அமைந்தமை இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும்.

யாப்பு 4

உ'கலி யாழ்கட லோங்கு பாருளிர் தன ன தானன தான தானணு என வரும்.

(25 முதல் 28 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின.

பாப்பு 5

முன்னிய கலேப்பொருளும் மூவுலகில் வாழ்வும் தந்தன தனத்தனன தானதன தான.

என வரும். இதன் முதலிலுள்ள தந்தன என்பது வல்லெழுத்துப் பெற்றவிடத்துத் தத்தன எனவும், நெடில் முதலாயவழி தானன? எனவும், குறிலிணை யாய் வந்து மெல்லெழுத்துப் பெற்றுத் தனந்தன’ எனவும் வல்லெழுத்துப் பெற்றுத் தனத்தன எனவும்