பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 47?

என முதற் சீரும் மூன்ருஞ் சீரும் விளச்சீர் மாச்சீர் காய்ச்சீர்களாகவும், இரண்டாஞ் சீரும் நான்காஞ் சீரும் பெரும்பாலும் காய்ச்சீர்களாகவும், சிறுபான்மை விளச்சீராகவும் ஐந்தாஞ் சீரும் ஆருஞ் சீரும் மாச்சீர் களாகவும் இவ்வாறு அறு சீரடிகளால் இயன்றது இவ் யாப்பு விகற்பமாகும்.

தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா

வேனும் வாங்குநீர் முத்தென்று கைகலு மான் மகன்போல் வருதிச் வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம் (ஐய

விரை சூழ் கானற் பூங்கோதை கொண்டு விலேஞர் போன் மீளும் புகாரே

யெம்மூர்,

எனச் சிலப்பதிகாரம் கானல் வரியில் வந்துள்ள சார்த்துவரிப் பாடலே ஒத்து அமைந்தது, மேற்காட்டிய பிரமபுரத்திருப்பதிகமாகும். சார்த்து வரியாவது, பாட் டுடைத் தலைவன் ஊராகிய பதியொடும் அவனுக்கு அமைந்த பெயரொடும் சார்த்திப் பாடப் பெறும் இசைப்பாட்டாகும்.

“ பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடும்

சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே ’ என அரும்பத வுரையாசிரியர் காட்டிய மேற்கோட் சூத்திரம் இவ் வரிப்பாட்டின் இயல்பினே விளக்குவ தாகும். மேற் காட்டிய தீங்கதிர் வாண்முகத்தாள் : என்ற கானல் வரிப்பாடலில் பாட்டுடைத் தலைவன் சோழன், அவன் ஊர் புகார். அவ்வூரின் வனப்புரைப்ப தாக அவ்வரிப்பாடல் அமைந்திருத்தல் காணலாம்.

மதுரையிற் கூன் பாண்டியன் அவையில் ஆளு டையபிள்ளேயார் எழுந்தருளியபோது பாண்டிய மன் னன், பிள்ளையாரை நோக்கி நும்பதியாது’ என வினவ, அதுகேட்ட பிள்ளையார் பரமனு ராகிய கழுமலமே எமது பதி என மறுமொழிகூறும் முறையிற் பிாம