பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

பன்னிரு திருமுறை வரலாறு


பியந்தைக்காந்தாரம்

கட்டளை 1

நீலநன் மாமிடற்ற ரிை றைவன் சினத்த நெடுமா வுரித்த நிகரில் தானான தானதத்த தனதத் தனத்த தனஞ தனத்த

தனகு.

"தானன தனதன ஆதலும், தத்த தந்த, தான ஆதலும், தனத்த தனகு, தான ஆதலும் அமையும். 83 முதல் 87 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. திருநாவுக்கரசர் தேவாரம் நாலாந் திருமுறையில் 'சிவனெனும் ஒசை என்ற மு த ற் கு றி ப் பு ைட ய பியந்தைக் க ந் த | ர ப் பதிகம் இக்கட்டளேயில் அடங்குதல் காண்க.

கட்டளை 2

துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு

சுடரோன் தனதந்த தந்த தனதந்த தந்த தனதந்த தந்த தனஞ.

என வருவது 88-ஆம் பதிகம். தன தந்த தன தன, தனதான ஆதலும், தந்த தத்த ஆதலும் தான ஆதலும் அமையும்.

கட்டளை 3

அறையும் பூம்புன லோடும் ஆடர வச்சடை தன்மேல் தனன தானன தான தானன தானன தான

என வரும் தன ன தான ஆதலும், தான தனன ஆதலும், தானன தனதன ஆதலும் பொருந்தும். 89 முதல் 96 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின.

97 முதல் 112 வரை அமைந்த பதிகங்கள் நட்ட ராகப் பண்ணுக்கு உரியன. நட்டராகப் பதிகங்களில் நான்கு யாப்பு விகற்பங்கள் உள்ளன.