பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருமுறைப் பாகுபாடு

புராண ஆசிரியர் உமாபதி சிவாசாரியாரல்லர் எனத் துணிந்து கூறுவாருமுளர். நெடுங்காலத்திற்கு முன் நிகழ்ந்த செய்திகளைக் கூறவந்த எந்த நூலிலும் இத் தகைய சிறிய வேறுபாடுகள் இடம்பெறுதலியல்பாத லின் இ.தொன்றே கொண்டு திருமுறை கண்ட புராண ஆசிரியர் உமாபதி சிவாசாரியாரென்று நெடுங் கால ம. க வழங்கிவவிம் வரலாற்றுரையினே மறுத் துரைத்தல் பொருந்தாதென்க.

இனி, நம்பியாண்டார் நம்பியால் முறைப்படுத் தப்பட்ட தேவாரத் திருமுறைகள் ஏழனுள் திருஞான சம்பந்தர் திருப்பதிகங்கள் முன்னரும் அவற்றை யடுத்துத் திருநாவுக்கரசர் திருப்பதிகங்களும் சுந்தரர் திருப்பதிகங்களும் பின்னரும் அமைதற்குரிய கார கணங்களே ஆ. ரா ய் ேவ ம். திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் திருநாவுக்கரசரும் நெருங்கிய நட்புடை யவர்களாய் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்களென்பதும் அவ்விருவருள்ளும் மிக முதிர்ந்த வயதுடையவர் திருநாவுக்கரசரென்பதும் அவ்விரு பெருமக்களது வரலாற்றினே விரித்துக் கூறும் பெரியபுராணத்தால் இனிது விளங்கும். இவ்விரு பெருமக்களும் இறைவன் திருவருளிற் கலந்து மறைந்த சில ஆண்டுகளுக்குப் பின் தமிழ் நாட்டில் திருவவதாரம் செய்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகளாவர். இம்மூவருள் திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகங்களே முதல் மூன்று திருமுறைகளாகவும் திருநாவுக்கரசர் பாடிய திருப் பதிகங்களே நான்கு ஐந்து ஆரும் திருமுறைகள கவும் இவ்விருவர்க்கும் பின் வந்த சுந்தரர் பாடிய திரும் பதிகங்களே ஏழாந் திருமுறையாகவும் முன்னுள்ள பெருமக்கள் வரிசைப்படுத்தி எழுதி வந்தார்களென் பதும் அம்முறையைப் பின்பற்றியே நம்பியாண்டார் நம்பியும் தம்காலத்திற் கிடைத்த மூவர் திருப்பதிகங் களையும் ஏழு திருமுறைகளாக வரிசைப்படுத்தினரென் பதும் திருமுறை கண்ட புராணத்தாற் புல ைம்.