பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494

பன்னிரு திருமுறை வரலாறு


அமைந்தது சாதாரிக்குரிய இத்திருவிராக யாப்பாகும். 84 முதல் 88 வரையுள்ள பதிகங்கள் இந்த யாப்புக் குரியனவாம்.

யாப்பு 4 திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்தி தனதனு தனதனு தனதனு தனதன தந்ததாகு. என வரும். தனதகு’ என்பது, தான,ை தத்தன, தந்தன. ஆதலும், தந்ததாகு’ என்பது தனன தான, தான தான, தத்ததான ஆதலும் பொருந்தும். 39 முதல் 93 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின.

யாப்பு 5

விண்ண வர் தொழுதெழு வெங்குரு மேவிய சுண்ணவென் பொடியணி வீரே தானன தனதன தானன தானன தானன தனதன. தா ை.

என முன்னிரண்டடிகளைப் போன்று பின்னிரண்டடி களும் வரும். தானன தனதன ஆதலும், தனதன’ தானன ஆதலும், தான தன ைஆதலும் அமையும். 94 முதல் 99 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின வாகும். இப்பதிகங்களின் பாடல்கள், முதலடியும் மூன்ருமடியும் நாற்சீர்கொண்ட அளவடியாக அமைய, இரண்டாமடியும் நான்காமடியும் முச்சீர் கொண்ட சிந்தடியாகிய முக்காலடியால் முடிந்தமையின் திரு முக்கால்’ என வழங்கப் பெறுவனவாயின.

இங்கனம் அளவடியும் சிந்தடியும் உறழ்ந்து இடை மடக்காய் வந்த இச் செய்யுள் வகையினே ஆசிரியத் துறையென வழங்குவர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்'.

1. வீரசோழியம் - யாப்புப் படலம். 16. உரை

நோக்குக.