பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

பன்னிரு திருமுறை வரலாறு


பதிகங்களும் ஒரே கட்டளேயமைப்புடையன என்பது புலகும்.

சுண்ண வெண் ணி றணி மார்பிற் ருேல்புனைந்

தா னனு கானன தாகு தானளு. என வரும். தானன தான ஆதலும் தனதன ஆத லும், தானு தா னன. ஆதலும் அமையும். மேற்குறித்த

பதிகங்கள் இரண்டில் 'கல்லூர்ப் பெருமணம் என்ற

பதிகம், ஆளுடைய பிள்ளேயார் திருநல்லூர்ப் பெரு மணத்தில் தம் திருமணங்காண வந்த அன்பர்கள் எல்லோரையும் உடன் அழைத்துக்கொண்டு அங்கே தோன்றிய ஈறில் பெருஞ்சோதியினுள்ளே புகும் பொழுது அருளிச் செய்யப்பெற்றது. ஆதலின், அவர் பாடியருளிய பதிகங்களின் முடிவில் வைக்கப்பெற்றது.

இனி, திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங் களில் திருமுறை யேடுகளில் இன்றித் திருவிடைவாசல் கோயிற் கல்வெட்டிலிருந்து வெளிவந்துள்ள

மறியார்கரத் தெந்தையம் மாதுமை யோடும் பிறியாதபெம் மானுறை யும்மிட மென்பர் பொறிவாய்வரி வண்டுதன் பூம்பெடை புல்கி

வெறியார்மஸ் ரிற்றுயி லும் விடை வாயே.

என வரும் திருப்பதிகம்,

தனளுதளு தானன தானன தா.ை என்னும் கட்டளே யமைப்புடையதாய், முதற்றிரு முறையில் 30 முதல் 33 வரையுள்ள தக்கராகப் பதிகங் களேயும் இரண்டாந் திருமுறையில் 35 முதல் 37 வரை புள்ள இந்தளப்பதிகங்களே யும் ஒத்திருத்தலால் அவ்விரு பண்களில் ஏதேனும் ஒன்றிற் பாடு தற்கேற்ற இசையமைப்புடையதாகக் கொள்ளுதல் பொருந்தும்.

நான்காந் திருமுறை

திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதி கங்கள் நான்கு ஐந்து ஆருந் திருமுறைகளாக வகுக்கப்