பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பன்னிரு திருமுறை வரலாறு


தேவாரத் திருப்பதிகங்கள் முதல்மூன்று திருமுறை களாக வகுத்துரைக்கப்பட்டன. திருஞானசம்பந்தப் பிள்ளேயார் திருநல்லூர்ப் பெருமனத்தில் இறைவன் திருவடியிற் கலந்து மறைந்தபின்னர்த் திருப்புக லூரில் திருநாவுக்கரசர் இறைவன் திருவடிகளிற் கலந்து மறைந்தாராதலின் அவர் பாடியருளிய திருப் பதிகங்கள் திருஞானசம்பந்தர் தேவாரத் திருப்பதிகங் களே அடுத்து நான்கு, ஐந்து, ஆருந் திருமுறைகளாக வரிசைப் படுத்தப்பட்டன. இவ்விருவர்க்கும் காலத் தாற் பிற்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த திருப்பதிகங்கள் அவ்விருவர் திருப்பதிகங்களே யடுத்து ஏழாந்திருமுறையாக அமைக்கப்பெற்றன. மாணிக்கவாசக சுவாமிகள் சுந்தரர்க்குக் காலத்தாற் பிற்பட்டவராதலின் அவர் பாடியருளிய திருவாசகத் தையும் திருச்சிற்றம்பலக் கோவையையும் சுந்தரர் தேவாரமாகிய ஏழாந்திருமுறையையடுத்து எட்டாந் திருமுறையாக வைத்தது மிகவும் பொருத்தமுடை யதேயாகும். சைவசமய குரவர் நால்வரையும் திரு ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் என வழங்கும் இம்முறையிலேயே அவர்கட் குப் பின்வந்த பட்டினத்துப் பிள்ளேயார் முதலிய பெரு மக்கானேவரும் வரிசை பெற வைத்துப் போற்றியுள் ளார்கள். இவ்வாறு வரிசைப்படுத்து எண்ணுதற்கு இப்பெருமக்கள் நால்வரும் ஒருவர்பின் ஒருவராகச் சிவபதமடைந்த காலமுறையே காரணமாகும். இக் கருத்தே பொருத்தமுடையதென்பதனேத் தஞ்சை K. S. ரீனிவாச பிள்ளையவர்கள் தாமெழுதிய தமிழ் வரலாறு என்னும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார் கள்.

திருமுறை யென்னும் இப்பெயர் மூவர் திருப்பதி கங்களுக்கு மட்டுமே வழங்கியதாகும். நம்பியாண்டார் நம்பியின் காலத்திற்குப் பின்புதான் இப்பெயர் திரு வாசகம் முதலிய ஏனேய நூல்களுக்கும் உரியதாய் வழங்கப்பெற்ற தென்பது திருமுறைகண்ட வரலாற் ருல் நன்கு பெறப்படும்.