பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 50.9

என ஒரெழுத்துக் குறைந்து பதினுேரெழுத்துக்களா லும், நிரையசை முதலாகத் தொடங்கின்,

இரண்டுகொ லாமவர் எய்தின தாமே. எனப் பன்னிரண்டெழுத்துக்களாலும் வரும். மேற் குறித்த எழுத்தளவும் வெண்டளேயும் பிழையாது நிற்க, மாச்சீர் விளச்சீர் காய்ச்சீர்கள் விரவிவருதல் இவ்யாப்பின் அமைப்பாகும். 16-ம் பதிக த்தின் மூன்ருமடியினே

மெய்யர் மெய்ந் நின்றவர்க் கல்லா தவர்க்கென்றும் தேமாங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய்.

எனப் பிரித்திசைத்து வெண்டளே பிழையாமை கண்டு கொள்க.

எத்தி புகினும் எமக்கொரு திதிலே தெத்தே யென முரன் றெம்முள் உழிதர்வர் முத்தி யனையதொர் மூவிலே வேல் பிடித் தத்தீநி றத்தார் அரனெறி யாரே.

என்பது 17-ம் பதிகத்தின் முதற்பாடல். இதன் முதலடியில் எத்தீ புகினும் என்ற பாடத்திற்கு வேருக எத்திசைபுகினும்’ என்ற பாடம் சில பதிப்புக் களில் காணப்படுகிறது. எத்திசை பு:கினும் என வரும் இருசீர்களும் கூவிளம் புளிமா என நின்று நிரை யொன் ருசிரியத் தளேயாய் வெண் டளே பிழைத்த லால் எத்தீ புகினும் ' என்ற பாடமே இப்பதிகத்தின் யாப்பமைதிக்கு ஏற்புடைய தென்பது நன்கு துணியப் படும்.

திருமூலர் அருளிய திருமந்திர மாலேயிலுள்ள திருப்பாடல்கள் யாவும் மேற்குறித்த இந்தளப் பதிகங் களின் யாப்பின் வண்ணம் அமைந்தனவாகும்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்ற னன் மூன்றினுள் தான்குனர்ந் தானேந்து