பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

பன்னிரு திருமுறை வரலாறு


வென்றனன் ஆது விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே. என வரும் திருமந்திரப் பனுவல், நாற்சீரடி நான் கில்ை இயன்று முதல் மூன்றடிகளிலும் அடியொன்றற் குப் பன்னிரண்டெழுத்துக்களும், ஈற்றடி நேரசையினை முதலாகக் கொண்டு தொடங்கியதாயின் பதினுே: ரெழுத்தும் பெற்று வெண்டளே பிழையாது வந்தமை காணலாம் எனவே திருமூலநாயனுர் அருளிய திருமந்: திசயாப்பு, திருநாவுக்கரசர் அருளிய இந் தளப் பதிகங் களின் யாப்புக்கு மூல இலக்கியமாக அமைந்தது. எனக்கொள்ளுதல் பொருந்தும்.

சீகாமரம்

19, 20-ஆம் ப தி கங் கள் சீகாமரப்பண்ணுக்கு

உரியன. இவற்றுள்,

சூலப் படையானே ச் சூதாக வீழருவிக்

கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானப்

பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய

ஆலத்தின் கீழானே நான்கண்ட தாருரே. என வரும் 19-ஆம் திருப்பதிகம், வெண்பாக்களிற் பயிலுதற்குரிய மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் ஆகிய சீர்களைப் பெற்று வெண்டள தழுவி நடக்கும் கொச்சகக் கலிப்பா யாப்பில் அமைந்ததாகும்.

  • ஆனத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்

கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்ருயால்

வாளுேர் வனங்க மறைமேன் மறையாகி

ஞானக் கொழுந்தாய் நடுக்கின் றியே நிற்பாய். (வேட்டுவவரி)

என்பது முதலாகச் சிலப்பதிகாரத்தில் வரும் வரிப் பாடல்கள் மேற்குறித்த வண்ணம் வெண்டளே தழுவி நடக்கும் கொச்சகக் கவிப்பாவுக்குரிய இலக்கியமாகத் திகழ்தல் காணலாம். இப்பாடல்களின் ஈற்றுச்சீர்