பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

பன்னிரு திருமுறை வரலாறு


திருநேரிசை

இத்திருமுறையில் 22 முதல் 79 முடியவுள்ள பதிகங்கள்

விளம், மா, மா, விளம், மா, மா, என்று அறுசீரடி யாப்பாக வரும் திருநேரிசைப் பதிகங்

களாகும்.

திருவிருத்தம்

80 முதல் 113 வரையுள்ள பதிகங்கள் கட்டளைக் கலித்துறை யாப்பாகிய திரு விருத்தப்பதிகங்கள். இவ் விருவகைத் திருப்பதிகங்களையும் கொல்லிப்பண்ணின் இருவேறு கட்டளைகளாகக் கொள்வர். "நந்தாத நேரிசையாங் கொல்லிக்கு நாட்டில் இரண்டு எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் திருநேரிசைப் பதிகங்களே நேரிசைக் கொல்லியென்றும் திருவிருத்தப் பதிகங்களே விருத்தக் கொல்லியென்றும் வழங்கும் வழக்குண்மை இனிது விளங்கும். இத்திருமுறையின் முதற்கண் கொல்லிப் பண்ணுக்குரியதாகக் குறிக்கப் பெற்ற கூற்ருயின’ என்ற திருப்பதிகம் வாகீசர் அருந்தமிழின் முந்தாய பல தமிழுக்கு ஒன் ருென்ரு மொழிவித்து’ என்றபடி தனியே ஒரு கட்டளேயாகக் கொள்ளப் பெற்றமையாலும் நேரிசையின் பின்னுள்ள திருவிருத்தப் பதிகங்களைத் திருமுறைகண்ட புராணம் குறிப்பிடாது விட்டமையாலும் நே ரி ைசயா ங் கொல்லிக்கு இரண்டு என்னும் தொகையுள் நேரிசை ஒரு கட்டளேயாகவும் திருவிருத்தம் ஒரு கட்டளேயாக வும் அடங்கினமை உய்த்துணரப்படும்.

ஐந்தாந்திருமுறை திருக்குறுந்தொகை யாப்பமைந்த திருப்பதிகங்

கள் நூறு கொண்டது. ஐந்தாந் திருமுறையாகும். (ஒருiமா கூவிளம் கூவிளம் கூவிளம்