பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரம் என்னும் பெயர் வழக்கு

மூவர் திருப்பதிகங்களேத் தேவாரம் என வழங்கும் வழக்கம் இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பரநாத ரு லாவில் தான் முதன்முதற் காணப்படுகின்றது.

  • மூவாதபேரன்பின் மூவர் முதலிகளும்

தேவாரஞ்செய்த திருப்பாட்டும் ??

என்பது அவ்வுலாவிலுள்ள தொடராகும். இத்தொட ரில் தேவாரஞ்செய்த திருப்பாட்டு என் புழித் தேவாரம் எனப் பெயர் நிலையில் வைத்துரையாமல் தேவராஞ் செய்த என வினே நிலையில் வைத்துரைத்தலால் 'திருப்பாட்டு’ என்பது மூவர் பாடிய திருப்பாடல் களேயும் தேவாரஞ் செய்த என்பது அத்திருப்பாடல் களே இசைப்படுத்திப் பாடிய தொழில் நிலேயையும் குறித்து நின்றன எனக் கொள்ளவேண்டியுளது.

மூவர் திருப்பதிகங்களே யும் .ே த. வ | ர ம் என்ற பெயரால் முதன் முதல் தெளிவாகக் குறிப்பிட்டு வழங் கியவர் சைவ எல்லப்ப நாவலராவர். இவர், தாம் பாடிய திருவருனேக் கலம்பகத்தில் சைவசமய குரவர் நால்வரையும் போற்றும் காப்புச் செய்யுளில் "வாய்மை வைத்த சீர்த்திருத் தேவாரமும் தி ரு வ | ச க மு. ம், உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்ருள் எம் உயிர்த் துணேயே” எனப் பாடிப் பரவுகின்ருர். இத் தொடரில் மூவர் திருப்பதிகங்களும் தேவாரம் என்ற பெயராற் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம். இரட்டையர்க்குக் காலத்தாற் பிற்பட்டவர் எல்லப்பநாவலர். இரட்டை யர் ஏகாம்பரநாதருலாவிற் குறிப்பிட்ட திருப்பாட்டும் சைவ எல்லப்பநாவலர் குறிப்பிட்ட தேவாரமும் ஒன்றேயென்பது இங்கெடுத்துக் காட்டிய எல்லப்ப நாவலர் கூற்ருல் இனிது புலகிைன்றது. மூவர் திருப் பதிகங்களேயும் தேவாரஞ் செய்த திருப்பாட்டு ' என்