பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

பன்னிரு திருமுறை வரலாறு


யாப்பு 7

தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு மானதி

டந்திகழ் ஐங்கனேயக் தான தளுதன. தா னன தானன தானன

தா னன தானதன. என வருவது பத்தாந்திருப்பதிகத்தின் அடியமைப் பாகும். இதனே,

தேனெய்புரிந் - துழல் - செஞ்சடை யெம்பெரு

மானதிடந் - திகழ் - ஐங்கணேயக் தான தனு - தன - தானன தானன

தானதனு - தன - தானதன. எனப் பிரித்துப் பாடுதலும் பொருந்தும்.

யாப்பு 8

திருவுடை யார்திரு மாலய ஞலும் கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா. என நாற்சீரடியாய் வெண்டளே தழுவி வருவது பதினுெ சாந் திருப்பதிகம்.

இப்பதிகம், நாலாந்திருமுறையில் 17-ம் பதிக மாகிய எத்தி புகினும் என்னும் இந்தளப்பதிக த்தினே அடியொற்றி யமைந்திருத்தல் உணரத்தக்கதாகும்.

யாப்பு 9

வீழக் காலனேக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்

தானு தான ஞ தன்னன தான தனதளு எனவரும் அடியமைப்பினேயுடையது பன்னிரண்டாந் திருப்பதிகமாகும். தானு தன னு ஆதலும் தானன ஆத லும், தனதகு தானகு ஆதலும் அமையும்.

"ஈண்டிசைசேர் இந்தளத்துக்கு இரண்டாக” என்றமையின் மேற்போந்த பன்னிரண்டு பதிகங் களிடையே பத்து யாப்பு விகற்பங்கள் உளவேனும்,