பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 531

யாப்பிற்கு அடிப்படையாக உள்ளமை ஆழ்ந்து உன ரத்தக்கதாகும். 83, 85 - ஆம் பதிகங்கள் ஒரேயாப் பின.

கட்டளை 2.

தொண்ட ரடித்தொழலும் சோதி யிளம்பிறையும் சூதன மென்முலேயாள் பாகமு மாகிவரும் என வரும் 84-ஆம் பதிகம்,

தான தனதனனு தான தனதனை

தானன தானதனு தானன தானதன.

என மேற்குறித்த கட்டளையினே இரட்டடிக்க வரும் கட்டளேயடியினே யுடையதாகும்.

86 முதல் 89 வரையுள்ள பதிகங்கள் சீகாமரப் பண்ணேச் சார்ந்தன. இப் பதிகங்களில் யாப்பு விகற் பங்கள் இரண்டுள்ளன.

யாப்பு 1.

விடையின்மேல் வருவானே வேதத்தின் பொருளானே புளிமாங்காய் புளிமாங்காய் தேமாங்காய் புளிமாங்காய்.

எனக் காய்ச்சீர் நான்கு கொண்ட அடியில்ை இயன்ற தரவு கொச்சகக் கலிப்பாவாக அமைந்தன. 86,89-ஆம் பதிகங்கள். இவை இரண்டாந் திருமுறையில் 40 முதல் 48 வரையுள்ள சீகாமரப் பதிகங்களே ஒத்தமைந்தன.

யாப்பு 2.

மாட மாளிகை கோபு ரத்தொடு மண்ட பம்வள

ரும்வளர்பொழில்

பாடல் வண்டறையும் பழனத் திருப்பனேயூர், தான தானன தான தானன தான தானன தானளுதளு தான தானதணு இனகு தனதான). என முன்னிரண்டடிகளைப் போன்று பின்னிரண்டடி களும் வரும். 87, 88-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.