பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 叙39

இனி, இக்காலத்தார் சிலர், “அருட்பெருகு திருப் பதிகம் எட்டொரு கட்டளேயாக்கி அவற்றுள் ஒன்று ... போற்றி யெடுத்தருளினர் பூவார் கொன்றை ' என வரும் பெரிய புராணத் தொடர்க்கு இவ்வாறு பொருள் கொள்ளாது, திருஞானசம்பந்தர் பாடிய தக்கராகப் பதிகங்கள் யாவும் எட்டுக் கட்டளேயுள் அடங்கும் என வும், அக்கட்டளேகளுள் ஒன்ருக அமைந்ததே ‘பூவார் கொன்றை என்ற பதிகம் எனவும், இவ்வாறு சேக்கிழார் தக்கராகத்திற்கு எட்டுக்கட்டளே கூறியிருக் கவும், திருமுறைகண்ட புராண ஆசிரியர், இன்னி சை யால் தருந்தக்கராகத்து ஏழ்கட்டளையாம்” எனத் தக்க ராகத்துக்கு ஏழு கட்டளேசியன்று கூறுதல் முரணும் எனவும் கூறுவர். மேல் எடுத்துக்காட்டிய பெரிய புராணச் செய்யுள், தக்க ராகம் ன்ற பண்ணுக்குரிய கட்டளே கள் இத்தனே எனக் கட்டளையின் தொகை யினைக் குறிப்பிடவில்லே. ஆளுடைய பிள்ளேயார் அப் பொழுது பாடிய ‘பூவார்கொன் றை” என்ற பதிகம் தக்க ராகப் பண்ணில் ஒரு கட்டளேயில் அமைந்த எட்டுத் திருப்பதிகங்களுள் ஒன்று என்பதனேயே அச்செய்யுள் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இதன் கண் எட்டு என்னும் தொகை அருட்பெருகு திருப் பதிகம் எட்டு’ எனப் பதிகத் தினேயே சார்ந்ததென்பது அவற்றுள் ஒன்று . . . பூவார்கொன் றை” என அப்பதி கத் தொகையினே த் தொடர்ந்து பின் வரும் தொடரால் நன்கு விளங்கும்.'

அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் வரலாறுகளேயும் விரித்துக் கூறும்பொழுது, அவர்கள் . இத் திருப்பாடற்கு இதுவே பொருள் என்பதனே ஆறுமுகத் தம்பிரான் உரை நோக்கித் தெரியலாம்.