பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 54

திருமுறைகளின் அமைப்புப் பற்றித் திருமுறைகண்ட புராணத்தில் கூறப்படும் செய்திகள் ப ல வு ம் சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி முதலிய முன்னே யோர் கருத்துக்களே அடியொற்றி யமைந்தன என்பது, திருமுறை நூல்களே ஒப்புநோக்கிப் பயிலுங்கால் இனிது புலம்ை.

இயற்றமிழில் வகுத்துரைக்கப்பெறும் ய ப் பு விகற்பம் ஒன்றிலேயே இசைத்தமிழ் விகற்பங்கள் பல தோன்றுதல் கூடும். இந் நுட்பம்,

"அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி

வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே'

(தொல்-சேய்புள்-11

என வரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் உய்த் துணரப்படும். .ெ ச ய் யு ட் க ளி ன் உறுப்புக்களாகிய அசையினே யும் சீ ரி னே யு ம் இசையமைதியோடு சேர்த்து நோக்கி, இசையமைப்புக்கு ஏற்ப அவ்வசை யினே யும் சீரினேயும் ப கு த் து உணர்த்துதலும் இயலிசைத் திறத்தில் வல்ல நல்லிசைப்புலவர் நெறி யாகும் என்பது, மேற்காட்டிய சூத்திரத்தின் பொரு ளாகும். ஒரு சீரின் முன்னும் பின்னும் உள்ள அசை யினே விட்டிசைத்துத் தனியசையாக நிறுத்தியும், சீரின் ஈற்றசையினேப் பின்வருஞ் சீரின் முதலிலும் முதலசையினே முன்னுள்ள சீரின் ஈற்றிலும் பிரித்து இசைத்தும், இவ்வாறு எழுத்துப்பிரிந்திசைத்தலாகிய இசைமுறை பற்றி இயற்றமிழ் யாப்பு ஒன்றிலேயே இசைத்தொடர்புடைய வ்ேறு சில யாப்பு விகற்பங்கள் தோன்றுதல் கூடும். இதற்கு இயற்றமிழ் யாப்பாகிய கட்டளைக் கலித்துறையினே இங்கு உதாரணமாக எடுத்துக் காட்டுதல் மிகவும் பொருந்தும்.