பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பன்னிரு திருமுறை வரலாறு


டுடன் இசைக் கூறுபாடுகளே இசைத்துப் பாட வல்ல இசைப்புலவனே வல்லோன் எனவும் அவனல் இயற்பாடலுடன் புணர்க்கப்படும் இசைக்கூறுபாட் டினே வாரம் எனவும் இயலிசைத் திறத்தில் வன்மை யில்லாதவற்ை புணர்க்கப்பெறும் வார இசை சிதைந் தொழியுமியல்பிற்றெனவும் " வல்லோன் புனரா வாரம் போன்றே” எனவரும் உவமையால் ஆசிரியர் தொல்காப்பியனுர் விளங்க வுணர்த்தியுள்ளார்.

இயற்கை வனப்பும் தெய்வ வனப்புமாகிய இரு வகை வனப்புகளே இசைப்பாடலுக்குரிய சிறப்புடைப் பொருள்களெனப் பண்டை த்தமிழாசிரியர் கருதினர். இக்கருத்திேைலயே இசைப்பாடல்கள் யாவும் முதற் பொருளும் கருப்பொருளுமாகிய உலகியற்பொருள் களின் இயற்கையழகினேயும் அவற்றின் உடனய் விளங்குந் தெய்வ அழகினேயும் பொருளாகக் கொண்டு பாடப்பெறுவன வாயின. இசையில் வல்ல பாணர் முதலிய கலேச்செல்வர் தம் இசைத்திறத்தை அவை யின்கண் புலப்படுத்தும்பொழுதெல்லாம் இசைப்பாட லுக்குச் சிறப்புடைப்பொருளாய் விளங்கும் முழுமுதற் பொருளேப் போற்றும் தெய்வப்பாடலேயே முதன்மை யாகப் பாடுவது வழக்கம். பண்டை நாளில் வாழ்ந்த பாணர் முதலியோர் இம்முறையினத் தொன்று தொட்டு வரும் இசைமரபாகக் கொண்டு போற்று தலைத் தமது முதற்கடமையாகக் கடைப்பிடித்து வந் துள்ளனர். இச் செய்தியினேப் பத்துப்பாட்டுள் ஒன் ருகிய மலைபடுகடாத்துள்,

  • மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக் கடவ தறிந்த இன் குரல் விறலியர் தொன்ருெழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை விருந்திற் பாணி கழிப்பி ?? [534 - 39]

எனவரும் அடிகளிற் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசி கர்ை தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம்.