பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 561

  • பண்ணில் ஒசை பழத்தினில் இன்சுவை” (5–47–8)

‘பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணும்' {16–15–11 )

'மருவற்கினிய

பண்ண கத்தான் பத்தர் சித்தத்துளான்” . (4–11 2-6)

'கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற பண்ணவன் காண் பண்ணவற்றின் திறலானுன் காண்”

(6–52–1) முத்தமிழும் நான்மறையும் ஆளுன்கண்டாய்” (-ே23-9)

என ஆளுடைய அரசும்,

‘ஏழிசையாய் இசைப்பயனுய்’ (7–51-10)

'பாட்டகத்து இசையாகி நின்ருனே? (7–62-3) *வண்டமிழ் வல்லவர்கள்

ஏழிசையேழ் நரம்பின் ஓசையை’ (7–83–6)

என ஆளுடைய நம்பியும் தமது அருள் வாழ்விற் கண் டுணர்த்திய அனுபவ உண்மையாகும்.

எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் முழுமுதற் கடவுளே வழிபட்டு இன்புறுதற்கேற்ற சாதன மாவன, இறைவனது பொருள் சேர் புகழை விரித்துரைக்கும் தோத்திரங்களாகிய இனிய இசைப்பாடல்களேயாகும். திருக்கோயில்களில் நாள் வழிபாட்டில் இறைவனுக் குத் திருமஞ்சனமும், நறுமலரும், திருவமுதும், தீபதுாய மும், நான்மறை முழக்கமும் அந்தணர் வேள்வியும் இன்றியமையாதவாமாறு போலவே, இறைவனது மெய்ம்மையான புகழ்த்திறங்களைப் பரவிப் போற்றும் செந்தமிழ்க் கீதமாகிய தெய்வப் பாடல்கள் மிகவும் இன்றியமையாதனவாகும். இவை திருக்கோயில் களில் இறைவனை வழிபட்டு நலம்பெறக் கருதிவரும் பல்லாயிரவராகிய மக்களது உள்ளத்தை நெகிழ்வித்து அன்ைேருள்ளத்தில் அருளாளனுகிய இ ைற வ ன் கோயில்கொண்டு விளங்கும்வண்ணம் பேரன்பாகிய பத்தியை விளைவிக்கும் ஆற்றல் வாய்ந்தன. ஆதலின் அண்ணலாகிய இறைவனைப் போற்றிய இசைத்தமிழ்ப்