பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562

பன்னிரு திருமுறை வரலாறு


பாடல்களாகிய இவற்றைப் பத்திமைப்பாடல்" என வழங்குவர் சான் ருேர். இறைவன் திருக்கோயில்களில் இன்றியமையாது இடம்பெறத்தக்க வழிபாட்டு முறை களில் பாடுதலாகிய இத் திருத்தொண்டு மிகவும் சிறந்ததாகும். இனிய இசைத் தமிழ்ப் பாடல்களாகிய தோத்திரங்களேத் தாளத்தோடும் யாழ், வீணே, முழவு, மொந்தை முதலிய இசைக்கருவிகளோடும் அன் புடைய அடியார் பலர் கூடிப்பாடும் கூட்டத்தைவிட்டு இறைவன் கனப்பொழுதும் பிரியாது உடனிருந்து அருள்புரிவான் என்பது ஆன்ருேர் துணி பாகும்.

‘தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணே பண்ணி நல்ல ‘முழவம் மொந்தை மல் கு பாடல் செய்கையிடம் ஒவார்’

(1–78–8) வந்தனேந் தின்னிசை பாடுவார்பால் மன்னினச்’

(1–8–5) என ஞானசம்பந்தரும்,

  • யாழின் பாட்டையுகந்த அடிகளே’ (5–41–5)

‘மணத்தகத்தான் தலே மேலான் வாக்கினுள்ளான் வாயாரத் தன் னடியே பாடுந்தொண்டர் இனத்தகத்தான்’ (6–8–5} என நாவுக்கரசரும் அருளிய திருப்பாடல்கள், பத்த" ராய்ப் பாடுவார் எல்லார்க்கும் இறைவன் எளிவந்து அருளுந் திறத்தை இனிது புலப்படுத்துதல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

வெண்ணெய் நல்லூர்ப்பெருமான், நம்பியாருர சாகிய சுந்தரரது திருமணத்தின் போது முதுவேதியர் கோலத்துடன் வந்து ஆரூரனே, எனக்கு உன் குடி முழுதும் அடிமை” எனக்கூறி, அதற்குச் சான் ருக எழுதுந் தமிழ்ப்பழ ஆவணங்காட்டி ஆரூரரை அடிமை கொண்டருளி அவரை நோக்கி, ' நீ நம்முடன் வன் மொழ் களேப் பேசினே ஆதலால் வன்ருெண்டன் என்ற