பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பன்னிரு திருமுறை வரலாறு


ஏனேயொன்றே தேவர்ப் பராஅய முன்னிலேக் கண்னே’’

என்ற செய்யுளியற் சூத்திரத்தில் ஒத்தாழிசைக் கலி யின் வகையாகத் தொல்காப்பியர் குறிப்பிடுவர். ஒத்தாழிசைக்கலி முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து என்பது மேற்குறித்த செய்யு ளியற் சூத்திரத்தின் பொருளாகும். எனவே தெய்வத் தினே முன்னிலேயாகச் சொல்லப்பட்டனவே தேவ பாணியாம், அல்லன தேவபாணியெனத் தகா எனவும் தெய்வம் படர்க்கையாயவழிப் புறநிலை வாழ்த்தாம் எனவும், தெய்வம் தன்மையில் சொல்லிற்ருகச் செய் யுள் செய்தல் கூடாதெனவும் கூறுவர் பேராசிரியர். தேவபாணி முத்தமிழ்க்கும் பொதுவென்றும் அஃது இயற்றமிழில் வருங்கால் கொச்சக வொரு போகாய் பெருந்தேவபாணி சிறுதேவபாணியென இரு வகைத் தாய் வருமென்றும் அவ்வாறு வரும் தரவினே நிலே யென அடக்கி முதலிலுள்ள தர வினே முக நிலேயெ ன வும் இடையிலுள்ள தரவினே இடைநிலேயெனவும் இறுதியில் நிற்பனவற்றை முரிநிலேயெனவும் பரவுதற் பொருண்மையால் செய்யுளியலில் ஆசிரியர் பெயர் கொடுத்தாரென்றும் அடியார்க்கு நல்லார் விளக்கங் கூறுவர்.

'கூறிய வுறுப்பிற் குறைபா டின்றித் தேறிய விரண்டு தேவபாணியும்’

என்பது அடியார்க்கு நல்லார் தரும் உரைமேற் கோளாகும்.

தேவபாணி யென்னும் பெயரையொட்டியே தேவாரம் என்னும் இப்பெயரும் தோன்றி வழங்கி யிருத்தல் வேண்டும். தேவபாணி யென்பது முன்னிலே யிடத்தில் தெய்வத்தைப் ப்ரவிய செய்யுளேக் குறித்த பெயரென்பது பேராசிரியர் கருத்தாகும். வாரம் என்பது முன்னிலே படர்க்கை என்னும் ஈரிடத்திற்கும் பொதுவாகிய தெய்வப் பாடலேக் குறித்து வழங்குவ