பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 553

பெயரைப் பெற்ருய். நமக்கு அன்பிற்ை செய்யத்தக்க வழிபாட்டிற்குரிய மந்திரம் இசைநலம் வாய்ந்த இனிய தமிழ்ப் பாடலேயாகும். ஆதலால் இந் நிலவுலகில் இயலிசைத் தமிழ்ப்பாடல்களால் நம்மைப் பாடிப் போற்றுவாயாக ' எனப் பணித்தருளினும் என்பது வரலாறு. இந் நிகழ்ச்சி,

மற்று நீ வன்மைபேசி வன்ருெண்ட னென்னும் நாமம் பெற்றனே நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனே பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்ருர் துர்மறை பாடும் வாயார்’

(தடுத்-70)

எனத் திருத்தொண்டர் புராணத்தில் தெளிவாகக் குறிக்கப்பெற்றுளது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியா ரூரர் முதலிய அருளாசிரியா கள் காலத்தில் தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் நிகழும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் தமிழ்மொழியே முதலிடம் பெற்று விளங் கியது. இறைவனது பெருங்கருனேத்திறத்தை வியந்து போற்றும் ப்த்திமைப் பாடலாகிய இசைத்தமிழ்ப் பாடல்கள் அக்காலத்தில் சிறப்பிடம்பெற்றன. இச் செய்தி,

செந்தமிழோர்கள் பரவியேத்தும்

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கந்தம் அகிற்புகையே கமழும் கணபதியிச்சரம் (1-8.9)

எனவும்,

“தம்மலரடியொன் றடியவர் பாவத்

தமிழ்ச் சொலும் வடசொலுந் தாள்நிழற்சேர

அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்

அச்சிறு பாக்கம் தாட்சிகொண்டாரே (1-77-4)

எனவும்,