பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 57;

  • ஆதாரம் பற்றி யசைவ முதலெழுத்து

மூதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு-போதாரும் உந்தி யிடைவளியா யோங்குமிடை பிங்கலேயால் வந்துமே லோசையாம் வைப்பு ’’

எனவும,

" ஐவகைப் பூதமும் ஆய சரீரத்து

மெய்பெற நின்றியங்கு மெய்யெழுத்தாற்-றுய்ய ஒருநாடி நின்றியங்கி உந்திமே லோங்கி வருமா லெழுத்துடம் பின் வந்து ’’ எனவும் வரும் பழைய பாடல்களால் அறிவுறுத்தப் பெற்றமை நினைக்கத்தகுவதாகும்.

முற்குறித்த மூலாதாரத்திலிருந்து இசையினை எழுப்புமிடத்து, மகர மெய்யினலே சுருதியைத் தோற்று வித்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் நாத த் தைத் தொழில் செய்து பாடுதல் தொன்றுதொட்டு வரும் இசைத்தமிழ் மரபாகும். இங்ங்னம் மூலாதாரத்தி னின்றும் இசையை யெழுப்பிப் பாடும் முறையினே 'ஆளத்தி' என வழங்குவர். ஆளத்தி செய்யுமிடத்துத் ‘தென்னு’ என்றும் தென என்றும் இரண்ட சையுங் கூட்டித் தென்ன தென என்றும் பாடப்படும். மெய் யெழுத்தாகிய பதினெட்டெழுத்துள்ளும் ம வ் வு ம் நவ்வும் தவ்வும் அல்லாத மற்றையெழுத்துக்கள் ஆளத் திக்கு வரப்பெரு என்பர்.

  • மகரத் தி ைெற்ருற் சுருதி விரவும்

பகருங் குறினெடில்பா ரித்து-நிகரிலாத் தென்கு தெளுவென்று பாடுவரேல் ஆளத்தி மன் குவிச் சொல்லின் வகை ??

எனவும் ,