பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரம் என்னும் பெயர் வழக்கு 4}

தாகும். வாரமென்னுஞ் சொல்லுக்கு இசையியக்கம் நான்கினுள் ஒன்று என்னும் பொதுப்பொருளும் தெய்வப் பாடல் என்ற சிறப்புப் பொருளும் உரியன வாதலின், அப் பொது நீக்கித் தெய்வப்பாடல் என்ற சிறப்புப் பொருளேயே அச்சொல் தருதல் வேண்டிப் பிற்காலத்தார் அதனைத் தேவாரம் எனச் சிறப்புடை ய டைமொழியுடன் சேர்த்து வழங்கு வாராயினர் . இன்னிசையால் இறைவனே ப் பாடிப் போற்றுதலேயே பண்டைத் தமிழர் சிறப்புடைக் கடவுள் வழிபாடாகக் கைக்சொண்டொழுகினர். அதனல் தெய்வ இசைப் பாட்டினேக் குறித்த தேவாரம் என்னுஞ்சொல் இறைவனே உளமுருகிப் போற்றும் வழிபாட்டினேயும் குறிப்பதாயிற்று.

முதல் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழன் முதலிய சோழ மன்னர்கள், மூவர் முதலிகள் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களைக் காதலாகி ஓதி எல்லாம்வல்ல சிவபெருமானே வழிபடும் பதிகப் பெருவழியில் ஒழுகியவராவர். அன்னேர் தாம் வழி படுதற்கென அமைத்துக்கொண்ட இறைவன் திரு வுருவினைத் தேவார தேவர் எனவும், திருப்பதிகம் ஒதி வழிபாடு செய்தற்குரிய பூசையிடத்தினைத் தேவாரத் துச் சுற்றுக்கல்லூரியெனவும், தாம் செய்யும் இறை வழிபாட்டிற்குச் சாதனமாக மூவர் திருப்பதிகங்களேயும் இசையுடன் பாடி உள்ளத்திற்கு அமைதியுண்டாக இசைத்தொண்டு செய்பவரைத் தே வாரநாயகம் எனவும் கல்வெட்டுகளிற் குறித்து வழங்கியுள்ளனர். இவ்வாறு கல்வெட்டுக்களில் தேவாரம் எனக் குறிக்கப் படும் வழிபாட்டிற்கும் தெய்வப் பாடல்களாகிய மூவர் திருப்பதிகங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என லாம். "நம் தேவாரத்துத் திருப்பதியம் பாடும் பெரி யான் மறைதேடும் பொருளான அகளங்கப் பிரியனுக் கும்’ எனவும், உறையூர்க் கூற்றத்துத் திருவட குடி மகாதேவர் ஸ்தானமடம் தேவாரத்துக்குத் திருப் பதியம் விண்ணப்பஞ் செய்யும் அம்பல்த்தாடி