பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576

பன்னிரு திருமுறை வரலாறு


யும் விதியிசை யெனப்படும். இதனைப் பிரமான சுருதி என்பர் வட நூலார். சட்ச பஞ்சமமாகிய கிளே முறைப் படி பதினெரு சுருதிகளும், சட்ச மத்திமமாகிய நட்பு முறைப்படி பதினுெரு சுருதிகளும் பிறப்பன. மேற் குறித்த இருபத்திரண்டு சுருதிகளே பழந்தமிழ் இசை மரபில் வழங்கிய இருபத்திரண்டு இசை நிலைகளாகும்.

இவ் விரு பத்திரண்டு சுருதிகளையும் பன்னிரண்டு இராசி வீடுகளில் வைத்து ஆராய்ந்து இசை நுட்பம் அறியும் முறை பழந்தமிழர் கண்டதாகும். சட்சம் நீங்க லாக எஞ்சியுள்ள பதினெரு வீட்டிலும் நட்பு முறையிற் பிறந்த சுருதி ஒன்றும் கிளை முறையிற் பிறந்த சுருதி ஒன்றும் ஆக இரண்டிரண்டு சுரு திகள் நிற்பன. இங்ங்னம் ஒரு வீட்டினுள் நிற்கும் நட்பு, கிளே என்னும் இருவகைச் சுருதிகளுக்கும் இடையே யமைந்த வேறு பாடு, முற்குறித்த பிரமாண சுருதியாகிய ஈரலகாகும். இச்சுருதி அளவிற் சிறியதாதலின் ஒரு வீட்டில் அமைந்த நட்பு கிளேயென்னும் இருவகைச் சுருதிகளே யும் கமக முறையினலே வேறுபாடின் றிப் பயன் படுத்திக் கொள் வர் இசைவாணர்.

தாரக்கிரமத்தில் 4, 4, 4, 1, 4, 4, 1 எனவும், குரற்கிரமத்தில் 4, 3, 4, 2, 4, 8, 2 எனவும், இளிக் கிரமத்தில் 4, 3, 2, 4, 4, 8, 2 எனவும் இருபத்திரண்டு சுருதிகளும் ஏழிசைகளாகப் பிரிந்து நிற்பன என்பர் யாழ் நூலார். ச, ரி, க, ம, ப, த, நி என எழுத்தாற் குறிக்கப்படும் ஏழிசைகளுக்கும் முறையே 4, 3, 2, 4, 4, 3, 2 என்னும் சுருதிகள் உரியன எனக்கூறுவர். இளிக் கிரமத்தின் அலகுகள் இளிமுதலாக 4, 8, 2, 4, 4, 8, 2 என நின்றன. எனவே குரல் முதலாக எண்ணப்படும் ஏழிசைகளும் முறையே 4, 4, 3, 2, 4, 8, 2 என்னும்