பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578

பன்னிரு திருமுறை வரலாறு


இவற்றின் அந்தரங்களாகத் தோன்றும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப்படுமலை, அந்தரக் கோடி, அந்தரச்செம்பாலே என்னும் ஐந்து சிறுபாலே களும் ஆகப் பன்னிரண்டு சுரக்கோவைத் தொடர் நிலை களேப் பண்டை த்தமிழ் மக்கள் கண்டுணர்ந்து * பன்னிருபாலேகள் எனப்படும் இவற்றின் அடியாகப் பல்வேறு பண்களைத் தோற்றுவித்து இசைவளர்த்தார் கள் என்பது சிலப்பதிகாரத்தாலும் அதன் உரைகளா லும் அறியப்படும்.

பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலேகளைத் தாரக்கிரமம், குரற்கிரமம், இளிக்கிரமம் முதலிய எல்லாக் கிரமங்களிலும் இசைக்கலாம். கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலேத்திரிபினுல் பல்வேறு பண்கள் தோன்றுவன என்பதும், தமிழ்ப்பண்கள் நூற்றுமூன்றும் ஏழ்பெரும்பால்ே ஐஞ்சிறு பாலேயாகிய இப் பன்னிரு பாலேகளிலிருந்தே தோன்றின என்பதும், ' பன்னிருபாலேயின் உரு, தொண்ணுாற்ருென்றும் பன் னிரண்டுமாய்ப் பண்கள் நூற்றுமூன்ரு தற்குக் காரண eாம் எனக் கொள்க ’ என அரும்பதவுரையாசிரிய ரும் , ' இவ்வேழு பெரும்பாலேயினேயும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும் " என அடியார்க்கு நல்லாரும் கூறுதலால் நன்கு விளங்கும்.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் இசைப் பாட்டினேப் பாடித்தரும் கவிஞனது இயல்பினே விரித் துரைக்கு மிடத்து “ இசைப்புலவன் ஆளத்திவைத்த பண்ணிர்மையை முதலும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும்